சோழவந்தானிலும் திமுகவினர் அராஜகம் செய்தியாளர்களை வெளியே போக சொன்னதால் மற்ற கவுன்சிலர்கள்.அதிர்ச்சி.

மதுரை மாவட்டம் சோழவந்தான்.திமுக பேரூராட்சி தலைவர் மற்றும் மன்ற உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம்பேரூராட்சி பகுதியில் நடைபெறும் திட்டங்களில் ஊழல் நடைபெறுவதாக பேரூராட்சி நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டுவெறும் சொற் பேரூராட்சி சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு உரிய முறையில் அழைப்பு விடுக்கப்படுதில்லை என மற்ற கவுன்சிலர் குற்றம் சாட்டுகின்றனர்குறிப்பிட்ட 4 கவுன்சிலர்களை மட்டும் வைத்துக் கொண்டு நிகழ்ச்சியை நடத்துவதாகவும் தலைவர் மற்றும் செயல் அலுவலர் மீது குற்றம் சாட்டுகின்றனர்மேலும் செய்தி சேகரிக்க வந்த.நிருபர்களை வெளியே போகச் சொன்னதால் மற்ற உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்தனர்மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி மாதாந்திர கூட்டத்தில் திமுக பேரூராட்சித் தலைவர் ஜெயராமன் செயல் அலுவலர் சுதர்சன் ஆகியோரிடம் வார்டு உறுப்பினர்கள் பேரூராட்சிகளில் நடைபெறும் பணிகளில் முறைகேடுகள் நடப்பதாகவும் அதனை கண்டிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.குறிப்பாக சோழவந்தான் பேரூராட்சி 8வது வார்டு கவுன்சிலர் மருதுபாண்டியன் கூறும்போதுநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நூலகத்தை இடமாற்றம் செய்யக்கூடாது என்றும் கடைவீதியில் உள்ள சிறுநீர் கழிக்கும் இடத்தில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும் என்றும் நகரில் செயல்பட்டு வரும் இறைச்சி கடைகளை கண்காணிக்க வேண்டும் என்றும் நூலகம் இடம் மாற்றினால் நூலகத்துக்கு வருபவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவும் சூழ்நிலை ஏற்படும் என கேட்டுக்கொண்டார். இதனால் பேரூராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதுவார்டு உறுப்பினர் சண்முகராஜா கூறும்போதுபேரூராட்சி சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் கவுன்சிலர்களுக்கு முறையான எந்த ஒரு முன்னறிவிப்பும் தெரிவிப்பதில்லை என்று தனது அதிருப்தியை தெரிவித்தார்மின்மயான டெண்டரில் எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல் டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது .இதனால் கவுன்சிலர்களுக்கு அது குறித்து தகவல் தெரிவிக்க வில்லை என்று கூறினார் தொடர்ந்துசெயலாளர் சுதர்சன் கூறும்போது சென்னையைச் சேர்ந்த நிறுவனம்ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் எடுத்துள்ளது என்று கூறினார். நகரில் செயல்பட்டு வரும் கழிப்பறைகள் சுகாதார கேடு விளைவிப்பதாக உள்ளது என்று சண்முகராஜா கூறினார்.இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறிய திமுக பேருராட்சித் தலைவர் ஜெயராமன் செய்தியாளர்களை கூட்ட அரங்கில் இருந்து வெளியே செல்லும்படி கூறினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் செய்தி சேகரிக்க விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்மதுரை மாநகராட்சியில் ஏற்கனவே செய்தியாளர்கள் அலைக்கழிக்கப்பட்ட நிலையில் சோழவந்தான் பேரூராட்சியிலும் தலைவர் மற்றும் செயல் அலுவலர் அதே போன்ற செயல்களை செய்து வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது. என்று அங்கிருந்த மற்ற கவுன்சிலர்கள் கூறினார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..