Home செய்திகள் தென்காசி மாவட்ட காவல் துறையின் முக்கிய அறிவிப்பு..

தென்காசி மாவட்ட காவல் துறையின் முக்கிய அறிவிப்பு..

by mohan

குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளதாக தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.தென்காசி மாவட்ட மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசு விதிமுறைகளின் படி பறிமுதல் செய்த இரு சக்கர வாகனங்கள் வழக்கு நிலுவையில் இருப்பதால் அவற்றை அரசுடமையாக்கப்பட்டு அவை ஏலம் விடுவது வழக்கம். தற்போது அரசுடமையாக்கப்பட்ட 74 இருசக்கர வாகனங்களை ஏலம் விட காவல்துறை மற்றும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் பாவூர்சத்திரம் காவல் நிலையம் அருகில் உள்ள வெண்ணிமலை முருகன் கோவில் முன்பு உள்ள மைதானத்தில் 13.05.2022 அன்று காலை 10 மணிக்கு பொது ஏலம் விடப்படுகிறது.பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 13.05.2022 அன்று காலை 9.00 மணியளவில் ரூ.2000 செலுத்தி காப்பு தொகை செலுத்தியதற்கான ரசீதை பெற்று கொள்ளவும். காப்பு தொகை செலுத்தியவர்கள் வாகனத்தின் ஏலம் எடுக்கவில்லை எனில் தொகை செலுத்தியதற்கான காப்பு தொகை திருப்பி ஒப்படைக்கப்படும். ஏலம் விடப்படும் 74 வாகனங்கள் பாவூர்சத்திரம் காவல் நிலையம் முன்பு உள்ள வெண்ணி மலை முருகன் கோவில் முன்புள்ள மைதானத்தில் உள்ளது. ஏலதாரர்கள் வாகனங்களை பார்வையிட்டு வாகன ஏலத்தில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஏலத்தில் எடுக்கப்படும் வாகனத்திற்கான ஏலத்தொகை அரசு நிர்ணயம் செய்துள்ள தொகை, வரியுடன் சேர்த்து ரொக்கம்மாக அன்றைய தினமே செலுத்த வேண்டும். ஏலம் எடுக்கப்பட்ட வாகனங்கள் தொகையை செலுத்திய உடன் ஏலதாரர்கள் வசம் ஒப்படைக்கப்படும். மேலும் ஏலம் எடுக்க வரும் ஏலதாரர்கள் கொரானா தடுப்பூசி இரண்டு தவணைகள் செலுத்தியிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!