Home செய்திகள் தென்காசியில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா..

தென்காசியில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா..

by mohan

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அழகு செடிகள்,நிழல் தரும் மரங்கள் மூலம் பசுமையாக்கும் பணிகள் மருத்துவமனை நிர்வாகத்தால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு முக்கிய நிகழ்ச்சியின் போது மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டும் வருகிறது. அந்த வகையில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா.ஜெஸ்லின் தலைமையில் சுமார் 500 மரக்கன்றுகள் மற்றும் அழகு செடிகள் நடப்பட்டன. மருத்துவமனைக்கு தேவையான வாகை மரக்கன்றுகள், அலங்கார அழகு செடிகள் மற்றும் இயற்கை உரம் உள்ளிட்டவைகளை R.சாதிர் (நகர்மன்ற தலைவர் தென்காசி நகராட்சி) பசுமை தென்காசி இயக்கம், தென்காசி 9 வது வார்டு கவுன்சிலர் ஆகியோர் இணைந்து வழங்கினர். மேலும் மருத்துவமனை வளாகம் முழுவதையும் பசுமையாக மாற்றுவதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நகர்மன்ற தலைவரிடம் வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உறைவிட மருத்துவர் S.S.ராஜேஷ் , செவிலியர் கண்காணிப்பாளர்கள் பத்மா,திருப்பதி, முத்துலட்சுமி மற்றும் மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இவர்களுடன் 9 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் நாகூர்மீரான்,1 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சுல்தான் ஷெரிப் காமில், “பசுமை தென்காசி ” முகமது முஸ்தபா,13-வது நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியர் இரா.வின்சென்ட், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் இள.பாபுவேலன், சாரல் ரத்த தான கழகம் அன்சாரி, பசுமை இலத்தூர் கனகராஜ், சண்முகராஜ் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் மருத்துவமனைக்கு தேவையான மரக்கன்றுகளை வழங்கி நடப்படுவதற்கு உதவிய அனைவருக்கும் பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் சார்பாக மருத்துவமனை கண்காணிப்பாளர் இரா. ஜெஸ்லின் நன்றி கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!