Home செய்திகள் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் நெல்லை காவல் உதவி ஆய்வாளரை நேரில் சந்தித்து ஆறுதல்..

தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் நெல்லை காவல் உதவி ஆய்வாளரை நேரில் சந்தித்து ஆறுதல்..

by mohan

தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு IPS நெல்லையில் காவல் உதவி ஆய்வாளரை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். நெல்லை மாவட்டம், சுத்தமல்லி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் C.மார்க்ரெட் தெரசா, சுத்தமல்லி காவல் நிலைய சரகம் பழவூர் கிராமத்தில் உள்ள அம்மன் கோவில் திருவிழாவில் 23.04.2022 அதிகாலை 00.45 மணியளவில் பெண் மு.நி.க. 3044 லெட்சுமி, காவலர் 3684, ரமேஷ், TSP.காவலர் 1012 மணிகண்டன் ஆகிய காவலர்களுடன் பாதுகாப்பு அலுவலில் ஈடுபட்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கடந்த 27.03.2022 அன்று மேற்படி உதவி ஆய்வாளர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த அவரது நண்பர் வேலுச்சாமி ஆகியோர் மீது மேற்படி ஆறுமுகம் மற்றும் அவரது நண்பர் குடிபோதையில் வாகவும் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ரூ.10,000/- அபராதம் செலுத்தியதை மனதில் வைத்துக் கொண்டு மேற்படி உதவி ஆய்வாளரிடம் தகராறில் ஈடுபட்டு திடீரென அவர் மறைத்து வைத்திருந்த சிறிய வகை கத்தியால் உதவி ஆய்வாளரின் இடது கன்னம், கழுத்து பகுதியில் அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார். இதையடுத்து உடனடியாக மேற்படி உதவி ஆய்வாளரை உடன் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மீட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை செய்ததுடன் எதிரியையும் கைது செய்தனர். பின்பு உதவி ஆய்வாளர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மேற்படி உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் மேற்படி ஆறுமுகம் மீது சுத்தமல்லி காவல் நிலைய குற்ற எண். 97/2022 u/s 294(b), 353,307 506(11) IPC ஆக வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேற்படி எதிரி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். இதையறிந்த தமிழக முதல்வர் அவர்கள் தொலைபேசி வாயிலாக உதவி ஆய்வாளரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததுடன், உயர்தர சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார். உதவி ஆய்வாளர் தற்போது உயர்தர மருத்துவ மருத்துவமனையில் (Tirunelveli Multi Speciality Hospital) அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார். உடல்நிலை சீராக உள்ளது. மேலும் காயம்பட்ட உதவி ஆய்வாளருக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையை தமிழக முதல்வர் அறிவித்தார். அறிவிக்கப்பட்ட தொகையை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மேற்படி உதவி ஆய்வாளரிடம் ஒப்படைத்தார். மேலும் காவல்துறை தலைமை இயக்குநர் காயம்பட்ட உதவி ஆய்வாளரை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததுடன் ஆறுதலும் கூறினார். சம்பவத்தின் போது உடனிருந்து காப்பாற்றி உடனடியாக சிகிச்சையளிக்க உதவிய காவலர்களை பாராட்டி வெகுமதி வழங்கினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!