Home செய்திகள் தென் தமிழகத்திலேயே முதல் முறையாக ரோட்டோன் ப்ரோ இதய அடைப்பு இயந்திரம் மூலம் அறுவை சிகிச்சை செய்த வேலம்மாள் மருத்துவமனை மருத்துவர்கள்.

தென் தமிழகத்திலேயே முதல் முறையாக ரோட்டோன் ப்ரோ இதய அடைப்பு இயந்திரம் மூலம் அறுவை சிகிச்சை செய்த வேலம்மாள் மருத்துவமனை மருத்துவர்கள்.

by mohan

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை பகுதியைச் சேர்ந்தவர் வசந்தா . இவரது கணவர் சங்கர் (வயது 53) இதய அடைப்பு நோய் காரணமாக ராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.மேல் சிகிச்சைக்காக மதுரை வேலம்மாள் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார்‌இது குறித்து இதயவியல் துறை மருத்துவர் சண்முகசுந்தரம்வேலம்மாள் மருத்துவமனை கார்டியாலஜி டிபார்ட்மெண்ட் மற்றும் மருத்துவர்கள் அந்த சங்கரை பரிசோதனை செய்ததில் இதயக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.இதற்காக புதிய வகை தொழில்நுட்ப இயந்திரங்கள் உதவியுடன்தொடந்து கொழுப்பு கட்டியால் ஏற்பட்ட அடைப்பு நாளடைவில் சுண்ணாம்பு கட்டியாக தற்போது மாறி இருந்தது தெரியவந்தது.சுண்ணாம்பு கட்டியாக மாறிய நிலையில் அதை நீக்குவது மிக சிரமமான செயல் என்றும் ரோட்டோ கருவி மூலம் சிகிச்சை செய்யப்பட்டு வந்தது.தற்போது வேலம்மாள் மருத்துவமனையில் புதிதாக ரோட்டோன் ப்ரோ என்ற கருவி அறிமுகப்படுத்தப்பட்டது.இதன் செய்தியாளர் சந்திப்பு வேலம்மாள் மருத்துவமனையில் நடைபெற்றது இதில் வேலம்மாள் மருத்துவமனை இதயவியல் துறை தலைவர் டாக்டர் சண்முகசுந்தரம், டாக்டர் வடிவேல், டாக்டர் செல்வகணேஷ், டாக்டர் மகேஷ் குமார் மற்றும் வேலம்மாள் குழும இயக்குனர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர் இதய மருத்துவத்துறை பழைய கருவிகளில் இதய அடைப்பு சிகிச்சையானது கொடுப்பதில் உடல் ரீதியாக நோயாளிக்கும் மருத்துவர்களுக்கும் சிரமம் இருந்தது .ஆனால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரோட்டோன் ப்ரோ என்ற கருவி மருத்துவர்களுக்கும் நோயாளிக்கும் எந்த ஒரு சிரமமும் இல்லாமல் எளிய முறையில் கையாள முடிகிறது.எனவே தற்போது வந்துள்ள இந்த சுண்ணாம்பு கட்டி அடைப்பை இந்த ரோட்டான் ப்ரோ கருவி மூலம் தான் சரிசெய்ய முடியும் என முடிவு செய்து இரண்டு நாள் இதற்காக காத்திருந்து இயந்திரம் வர வைக்கப்பட்டு இந்தச் சிகிச்சை செய்யப்பட்டது.கூடிய சீக்கிரத்தில் மருத்துவமனையில் இதுபோன்ற சிகிச்சைக்காக ரோட்டோக் ப்ரோ கருவி பேருதவியாக இருக்கும். இந்த சிகிச்சை தென்தமிழகத்தில் முதல்முறையாக வேலம்மாள் மருத்துவமனை செய்துள்ளது. அதில் இதய அடைப்புகளில் சுண்ணாம்புகட்டியினை வெற்றிகரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளது என Dr. சண்முகசுந்தரம் கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!