Home செய்திகள் மத்திய அரசு நிதி வழங்கி கட்ட இருந்தால் 10 வருடங்கள் கழித்து கூட எய்ம்ஸ் மதுரைக்கு வராது . மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்..

மத்திய அரசு நிதி வழங்கி கட்ட இருந்தால் 10 வருடங்கள் கழித்து கூட எய்ம்ஸ் மதுரைக்கு வராது . மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்..

by mohan

மதுரை வேலம்மாள் மகப்பேறு மருத்துவத்துறை மற்றும் குழந்தை நலத்துறை இணைந்து நடத்தும் ஆரோக்கிய குழந்தைகள் வளர்ப்பு போட்டி பரிசு வழங்கும் விழா மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் நடைபெற்றது.இதில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்க தாகூர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆரோக்கியமான குழந்தை வளர்த்த பெற்றோர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.இப்போட்டியில் 250 குழந்தைகள் பங்குபெற்றனர்.மூன்று பிரிவில் நடைபெற்ற போட்டியில் மொத்தம் 47 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு14 பேருக்கு முதல் பரிசாக ரூபாய் 10 ஆயிரம்’இரண்டாம் பரிசாக 6 ஆயிரம் ரூபாய் 14 பேருக்கும் மூன்றாம் பரிசாக 4 ஆயிரம் 19 பேருக்கு மொத்தம் 3 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் காசோலைகள் வழங்கப்பட்டது.விழாவிற்கு வேலம்மாள் குழும தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்வேலம்மாள் இயக்குனர் கார்த்திக ஆகியோர் கலந்துகொண்டனர்.முன்னதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசுகையில் இந்தியாவிலேயே முதல்முறையாக கடன் வாங்கி கட்டக்கூடிய ஒரே எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என்றும், கடன் வாங்குவதால் மட்டுமே மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வரப்போவதாகவும், கவர்மெண்ட் ஆப் இந்தியா வழங்கி கட்டி இருந்தால் 10 வருடம் கழித்துக் கூட வந்திருக்காது என்றார்.நிகழ்ச்சியின் முடிவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், மாணிக் தாகூர் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தனர் :-அப்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி முடிவு பெறுவதற்கு முன்பே ராம்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை மாணவர்களின் ஐந்து வருட படிப்பை முடிவு பெற்று விட்டாள் அவர்களின் நிலைமை என்ன என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு.அவர்கள் ராம்நாடு மருத்துவக்கல்லூரியில் படித்ததாக தான் அர்த்தம், இதற்காக தான் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.எந்த ஒரு திட்டமும் இல்லாமல் 2019 தேர்தலுக்காக அவசரம் அவசரமாக அடிக்கல் நாட்டப்பட்டது தான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தாமதத்திற்கான காரணம் எனறும், 2026 மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.தொடர் மின்வெட்டு குறித்த கேள்விக்குதமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் மின்வெட்டு நடைபெற்று வருகிறது, இதற்கு காரணம் மத்திய அரசு எடுத்த தவறான நிலக்கரி கொள்கையே காரணம்., குறிப்பாக அதானி நிறுவனத்திற்கு நிலக்கரி சுரங்களை அள்ளிக் கொடுத்து அதன் விளைவாக தொடர் மின்வெட்டை தற்போது சந்தித்து வருகிறோம் என விருதுநகர் எம்பி மாணிக் தாகூர் கூறினார்,மோடியை புகழ்வதற்கு இளையராஜாவிற்கு உரிமையிருக்கிறது அம்பேத்கரை இகழ்வதற்கு உரிமை இல்லை என மதுரை எம்பி சு வெங்கடேசன் கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!