Home செய்திகள் ஆலங்குளம் அருகே நடந்த மனுநீதி நாள் முகாம்; நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்..

ஆலங்குளம் அருகே நடந்த மனுநீதி நாள் முகாம்; நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்..

by mohan

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் மயிலப்பபுரத்தில் மனுநீதி நாள் முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ச. கோபால சுந்தர ராஜ் வழங்கினார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் வெங்கடாம்பட்டி பகுதி-1 கிராமம், மயிலப்பபுரம் சமுதாய நலக் கூடத்தில் மாவட்ட ஆட்சியர் ச. கோபால சுந்தர ராஜ் தலைமையில் 20.04.2022 அன்று மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் வருவாய் துறை சார்பில் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியம், ஆதரவற்ற விதவை பெண்கள் ஓய்வூதியம் 5, மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம், உழவர் அட்டைகள் 15 பட்டா மாறுதல், 9 பயனாளிகளுக்கு வரன்முறை செய்து பட்டா வழங்குதல், 11 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குதல், உட்பிரிவு பட்டா மாறுதல் என 59 பயனாளிகளுக்கும், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் 1 பயனாளிக்கு தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம்திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் வம்பன்-8 ரக உளுந்து விதை மற்றும் தோட்டக் கலைத்துறை சார்பில்தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2 விவசாயிகளுக்கு தலா ரூ.5000 மதிப்பில் இயற்கை பண்ணைய இடு பொருட்கள் என ஆக மொத்தம்- 62 பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ச.கோபால சுந்தர ராஜ் வழங்கினார். மனுநீதி நாள் முகாமில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 160 மனுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டது.மேலும் சமுதாய நலக் கூட வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் ச. கோபால சுந்தர ராஜ் புங்கை மரக் கன்று நட்டு வைத்தார். முகாமில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தோட்டக் கலைத்துறை மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை உள்ளிட்ட துறைகள் சார்பாக அரசு நலத்திட்டங்களை விளக்கும் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சியில் ஆலங்குளம் வட்டாட்சியர் பரிமளா வரவேற்புரை ஆற்றினார்.கடையம்ஒன்றியத் தலைவர் செல்லம்மமாள், வெங்கடாம்பட்டி ஊராட்சித் தலைவர் ர.ஸாருகலா ஆகியோர்வாழ்த்துரை வழங்கினார்கள். பல்வேறு அரசு நலத்திட்டங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அரசுத்துறைகள் சார்ந்த அரசு அலுவலர்கள் திட்டவிளக்க உரை ஆற்றினார்கள். சமூக பாதுகாப்புத்திட்ட தனி வட்டாட்சியர் அ.சண்முகம் (ஆலங்குளம்) நன்றி உரையாற்றினார். மேலும் வருவாய் கோட்டாட்சியர் கங்காதேவி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் பா. ஷீலா, வேளாண் இணை இயக்குநர் த.தமிழ் மலர், தோட்டக்கலைத் துறை இயக்குநர் ஜெயபாரதி மாலதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குணசேகரன், உதவி ஆணையர் (கலால்); ராஜ மனோகரன், மாவட்ட தொழில் மைய மேலாளர் ப. மாரியம்மமாள், கோவிந்த பேரி ஊராட்சி ஒன்றியத் தலைவர் டீ.க.பாண்டியன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!