Home செய்திகள் போலி ஆவணம் மூலம் விற்கப்பட்ட நிலம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவின் உதவியுடன் மீட்பு..

போலி ஆவணம் மூலம் விற்கப்பட்ட நிலம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவின் உதவியுடன் மீட்பு..

by mohan

போலி ஆவணம் மூலம் விற்கப்பட்ட நிலம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவின் உதவியுடன் மீட்கப்பட்டது. தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியில் அமைந்துள்ள தன்னுடைய 30 லட்சம் மதிப்பிலான 5 செண்ட் நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்ததாகவும், தனது நிலத்தை மீட்டு தருமாறும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைந்துள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் கடையநல்லூர் பகுதியில் வசித்து வரும் முகம்மது காசிம் என்பவர் புகார் அளித்தார். அதன் பேரில் காவல் ஆய்வாளர் சந்தி செல்வி துரிதமாக விசாரணை செய்ததில் புகார் அளித்த முகமது காசிம் என்பவர் 2003 ஆம் ஆண்டு 5 செண்ட் நிலத்தை மருதன் என்பவரிடம் இருந்து வாங்கியதும், அந்த நிலத்தை தற்போது மருதனின் வாரிசுகள் இணைந்து ஏற்கனவே நிலம் விற்கப்பட்டதை மறைத்து புதிதாக போலி ஆவணம் தயார் செய்து வேறொரு நபருக்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. பின்பு அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS முன்னிலையில் முகமது காசிமிடம் ஒப்படைக்கப்பட்டது. உரிய முறையில் விசாரணை மேற்கொண்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார். மேலும் நிலத்தை பெற்றுக்கொண்ட முகமது காசிம் காவல்துறையினருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!