Home செய்திகள் காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 136 தொகுப்பூதிய பணியாளர்கள் இரண்டாம் நாளக தொடர் உண்ணாவிரதப் போராட்டம்.

காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 136 தொகுப்பூதிய பணியாளர்கள் இரண்டாம் நாளக தொடர் உண்ணாவிரதப் போராட்டம்.

by mohan

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 136 தொகுப்பூதிய பணியாளர்கள் இரண்டாம் நாளக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.முதல்வர் ஸ்டாலினுக்கு பல்கலையில் வேலை இழந்த 136 பணியாளர்களுக்கு “விடியல் தர” (வேலை) கோரிக்கை’பணிநீக்கம் பட்டதைக் கண்டித்து 136 பணியாளர்கள் 6வது நாளாக துணைவேந்தர் அலுவலகம் முன் தொடர் முற்றுகைமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 136 தொகுப்பூதிய பணியாளர்களை கடந்த 12ம் முதல் வேலையில் இருந்து நீக்கினர்.காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிதிப்பற்றாக்குறை காரணமாக தொகுப்பூதிய பணியாளர்கள் 136 பேர் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டது. ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதனைத் தொடர்ந்து காமராஜர் பல்கலைக்கழக தொகுப்பூதிய பணியாளர்கள் கடந்த 13ஆம் தேதி முதல் பல்கலைக்கழக வளாகத்தில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதில் கடந்த இரண்டு நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர் .தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட 136 பேர் மீண்டும் வேலையில் அமர்த்தி தங்களின் வாழ்க்கை தரம் உயர வழி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!