Home செய்திகள் மின்வாரியத்தின் அலட்சியப்போக்கை கண்டித்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மின்வாரியத்தின் அலட்சியப்போக்கை கண்டித்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கணவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜயோக்கியம். மனைவி ஈஸ்வரி (55).இவருடைய தோட்டத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது.இதுகுறித்து மின்வாரியத்;திடம் பல முறை புகார் அளித்தும் மின்கம்பியை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.இந்நிpலையில் ஈஸ்வரி தனது தோட்டத்தில் மேய்ச்சலுக்காக விடப்பட்ட பசுமாடு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து உயிருக்கு போராடியபடி அலறியுள்ளது.இதனைக்கண்ட ஈஸவரி அருகிலிருந்த குச்சியால் மின்கம்பியை தட்டிவிட்டு பசுமாட்டை காப்பாற்றியுள்ளார்.ஆனால் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் ஈஸ்வரி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து சேடபட்டி போலிசார் வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக ஈஸ்வரியின் உடலை உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.இந்நிலையில் அறுந்து கிடக்கும் மின்கம்பியை இதுவரை சரி செய்யாத மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியப் போக்கை கண்டித்தும் இறந்த பெண்ணுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும் கணவாய்ப்பட்டி கிராமமக்கள் ஈஸ்வரியன் உடலை வாங்க மறுத்து உசிலம்பட்டி அரசு மருத்துவமணை முன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் உசிலை- பேரையூர் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது..பின் மறியலைக் கைவிட்ட கிராமமக்கள் உசிலம்பட்டி அரசு மருத்துவமணையை முற்றுகையிட்டனர்;. தகவலறிந்த உசிலம்பட்டி போலிசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முற்றுகையை கைவிடச் செய்தனர்.உசிலம்பட்டி கிராமப்பகுதிகளில் கடந்த வாரம் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததில் ஆங்காங்கே தோட்டத்திலுள்ள மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன.இதனை அகற்றி மாற்றி அமைக்க மின்வாரியத்தில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை மின்கம்பியை மாற்றாமல் அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!