Home செய்திகள் தென்காசி மாவட்ட தமுமுக சார்பில் தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கு முக்கிய கோரிக்கை..

தென்காசி மாவட்ட தமுமுக சார்பில் தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கு முக்கிய கோரிக்கை..

by mohan

தென்காசி மாவட்ட தமுமுக சார்பில் தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கு முக்கிய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில், நெல்லையில் இருந்து தென்காசி வழியாக தாம்பரத்திற்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு இரயில் கடையநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் இரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும் என தமுமுக தென்காசி மாவட்ட செயலாளர் முகம்மது பாசித் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:தென்னக ரயில்வே சார்பில் பயணிகள் வசதிக்காக நெல்லையில் இருந்து தென்காசி வழியாக தாம்பரத்திற்கும் மறு மார்க்கமாக தாம்பரத்திலிருந்து மதுரை தென்காசி நெல்லை வரை இயக்கப்படும் கோடைகால சிறப்பு வாராந்திர ரயில் (06004/06003) 17/04/2022 முதல் ஜீன் மாதம் 27 தேதி வரை இயக்கப்பட உள்ளது. இரு மார்க்கங்களிலும் பயணிக்கும் இந்த கோடைகால வாராந்திர சிறப்பு இந்த ரயில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் ரயில்வே நிலையங்களில் நிறுத்தம் இல்லை. இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. ஆனால் கோடை கால சிறப்பு ரயில் இந்த இரண்டு இரயில் நிலையங்களிலும் நின்று செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் சென்னை போன்ற தலைநகரங்களில் பல்வேறு தொழில் சம்பந்தமாக மற்றும் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை நிறுவனங்களில் வேலை செய்வதற்காகவும், அதிகமாக இந்த ரயில் பயணங்களையே பயன்படுத்தும் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் கடுமையான அவதிக்கு உள்ளாவார்கள். இதுபோன்ற பொதுமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டும், தற்போது ரமலான் மாதம் என்பதால் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட இருக்கும் கடையநல்லூர் போன்ற இஸ்லாமிய மக்கள் அதிகமாக வாழும் பகுதியில் இது சிறப்பு வாராந்திர ரயில் கட்டாயம் நின்று செல்ல வேண்டும் எனவும், தென்காசி தமுமுக மாவட்ட செயலாளர் முகம்மது பாசித் தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு பதிவு தபால் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!