Home செய்திகள் கமுதி அருகே பொன் ஏர் பூட்டும் சித்திரை உறவு விழா.

கமுதி அருகே பொன் ஏர் பூட்டும் சித்திரை உறவு விழா.

by mohan

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோவிலாங்குளம் பட்டி கிராமத்தில் சித்திரை1 தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விவசாயிகள் இணைந்து பாரம்பரிய முறைப்படி பொன்னேர் பூட்டும் விழா நடந்தது.தமிழ் வருடப்பிறப்பின் முதல் நாளான சித்திரை 1 அன்று பாரம்பரியமாக விவசாயிகள் விவசாய பணிகளை முதன்முதலாக துங்குவதன் அடையாளமாக பொன் ஏர் பூட்டும் விழா நடைபெறுவது வழக்கம். தற்போது இந்த பழக்கம் குறைந்துள்ள சூழலில் ஒரு சில கிராமங்களில் மட்டுமே இந்த பொன்னேர் பூட்டும் விழா அல்லது சித்திரை உறவு நிகழ்வு கொண்டாடப்பட்டு வருகிறது .பொன் ஏர் பூட்டுதல் . பொன் விளையும் பூமி என விளைநிலத்தை உயிர் நிலமாக மதித்து வரும் விவசாயிகள் முதல் உழவு செய்யும்போது மண்ணை பொன்னாக பாகிப்பர். அந்த காலத்தில் தங்க ஆபரணம் அல்லது தங்க காசை முதலாக மண்ணில் வைத்து அதில் மாடுகள் பூட்டிய கலப்பையை வைத்து உழுவர், இதுவே பொன்னேர் பூட்டுதல் என்று அழைக்கப்பட்டது. தற்போது உழவில் தங்கம் அதாவது பொன் சேர்க்கப்பட இயலாத சூழலால், சித்திரை உழவாக அதே சம்பிரதாயப்படி ஒரு சில கிராமங்களில் தற்போது நடைபெற்று வருகிறது. கமுதி அருகே கோவிலாங்குளம் பட்டி கிராமத்தில் நடந்த இந்நிகழ்வு குறித்து பாண்டிய நாடு பண்பாட்டு மைய பண்பாட்டு ஆய்வாளர் செல்வம் கூறியதாவது:இந்த பொன் ஏர் பூட்டும் நிகழ்வுக்காக சித்திரை 1 அன்று காலையில் பஞ்சாங்கம் பார்த்து நல்ல நேரம் விவசாயிகள் குறிக்க கிராம விவசாயிகள் அனைவரும் ஓரிடத்தில் ஒன்றாக கூடுவர். கூடி நல்ல நேரம் பார்த்து பொன்னேர் பூட்டும் நிகழ்வு துவங்குவதற்கான பணிகளை செய்வோம். சித்திரை 1 அன்று காலையில் நல்ல நேரம் பார்த்து நாட்டுக் கருவேல மரத்தில் தார்க்குச்சி வெட்டி அதற்கு மஞ்சள் தடவி வழிபடுவோம். தொடர்ந்து கலப்பையில் ஏர்க்கால் கட்டி மஞ்சள் ஐந்து வெற்றிலையுடன் சேர்த்து கட்டி வழிபடுவதற்கு தயாராக வைப்போம். உழவு மாடுகளுக்கும் அதன் கொம்பில் 7 வெற்றிலை மஞ்சள் வைத்து கட்டி வழிபாட்டிற்கு தயாராக செய்வோம். வீட்டில் குலதெய்வத்தை வணங்கிவிட்டு விளைநிலத்திற்கு வந்து வரிசையாக வைக்கப்பட்டு இருக்கும் கலப்பை, தார்க்குச்சி, உழவு மாடுகளை வணங்கி ஏர்பூட்டிய கலப்பையுடன் உழவு தொடங்கும். ஆண்கள் ஏர் கலப்பையால் உழவு செய்து கொண்டே வரும்போது பின்னால் வீட்டு பெண்கள் விதைகளை தூவிக் கொண்டே வருவர். இந்த பொன் ஏர் பூட்டுதல் எங்கள் கிராமத்தில் பாரம்பரியமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சித்திரையில் இப்பகுதியில் சோளம், நெல் , பாசிப் பருப்பு ஆகியவை தான் விதைக்கப்படுகிறது. தை மாதம் முளைப்பாரி திருவிழாவின் போது நன்கு விளைந்த தானியங்களே இப்போது விதைக்கப்படும்.இந்த பொன் ஏர் பூட்டல் நிகழ்விற்கு கிளம்பும் விவசாயிகள் கிளம்பும் முன் வீட்டில் சுவாமி படம் அருகே நீராகாரத்தை வைத்து கடவுளை வணங்கி செல்வர், பொன் ஏர் பூட்டி உழவுப் பணி செய்து விட்டு ஆண்கள் திரும்பும்போது அவர்களின் முறைப்பெண்கள் அவர்களை வரவேற்க ஊர் எல்லையில் காத்துக் கொண்டிருப்பர். அவர்கள் வந்தவுடன் குலவையிட்டு ஆண்கள் நெற்றியில் திலகமிட்டு அவர்களை வரவேற்பர் .இந்நிகழ்வு உழவின் பெருமை, உறவுகளின் அருமையை விளக்கும் இனிய நிகழ்வாக அமைந்துள்ளது.இக்கிராமம் போல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் சித்திரை முதல் உழவு நிகழ்வு பாரம்பரிய முறைப்படி விவசாயிகளால் கொண்டாடப்படுகிறது. பொன் விளையும் பூமியாய் நம் விளைநிலத்தை சுவாமி போல காத்து வருவது நம் தமிழ் மரபு அந்த மரபை போற்றி பாதுகாக்கும் விதமாக பல கிராமங்களில் விவசாயிகள் பொன் ஏர் பூட்டும் நிகழ்வுகள்ஆங்காங்கேஇன்றும் ஓசையின்றி நடந்து கொண்டுதான் வருகிறது. தமிழ் மரபு காக்கும், நமது விவசாயம் போற்றும்இந்நிகழ்வுகள் ஒவ்வொரு ஆண்டும் இந்த தமிழ் புத்தாண்டன்று தொடர வேண்டும். நம் பண்பாடு, பாரம்பரியம் காக்கப்பட வேண்டும். உழவர்கள் போற்றப்பட வேண்டும். என்பதே நம் விருப்பம் என்றார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!