Home செய்திகள் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறை சார்பாக தேசிய தீயணைப்பு சேவை தினம். நீத்தார் நினைவு நாள் அனுசரிப்பு .

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறை சார்பாக தேசிய தீயணைப்பு சேவை தினம். நீத்தார் நினைவு நாள் அனுசரிப்பு .

by mohan

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறை சார்பாக தேசிய தீயணைப்பு சேவை தினம்( நீத்தார் நினைவு நாள் அனுசரிப்பு) மதுரை மாவட்டம் தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்ற தேசிய தீயணைப்பு சேவை நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது இந்திய அரசின் வழிகாட்டு நெறி முறைப்படி தீ பாதுகாப்பு நெறிமுறைகள் ஒரு வாரம் பாதுகாப்பு நெறிமுறைகள் அனுசரிக்கப்படுகிறது… தேசிய தீயணைப்பு சேவை தினம் வீரமரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விழா நடைபெற்றது 1944 அன்று ஏப்ரல் 14 அன்று விக்டோரியா துறைமுகத்தில் தனியார் கப்பலில் இருந்து சுமார் 1400 கிலோ வெடிபொருள் உராய்வு காரணமாக பெரும் தீ விபத்து ஏற்பட்டது இதில் 71 தீயணைப்பு வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள் இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 14ஆம் நாள் தேசிய தீயணைப்பு சேவை தினமாக அனுசரிக்கப்படுகிறது இன்று நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் தென் மண்டலம் துணை இயக்குனர் விஜயகுமார் முன்னணியில் தேனி மாவட்ட அலுவலர் கல்யாணகுமார் மற்றும் மதுரை மாவட்ட கூடுதல் பொறுப்பு அலுவலர் பாண்டி தலைமையில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர் இதில் தீயணைப்பு வீரர்கள் அஞ்சலி செலுத்தினார்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!