Home செய்திகள் குறிக்கோளுடன் படித்தால் இலக்கை அடையலாம் ;  குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் மாணவர்களுக்கு அறிவுரை

குறிக்கோளுடன் படித்தால் இலக்கை அடையலாம் ;  குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் மாணவர்களுக்கு அறிவுரை

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த செ.நாச்சிப்பட்டு ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெற்றி நமதே அரசு பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டுதல் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிலரங்கம் நிகழ்ச்சி மாவட்ட கல்வி அலுவலர் முனைவர் கு. அரவிந்தன் தலைமையில் நடைபெற்றது. சக்தி பாலிடெக்னிக் கல்லூரி இயக்குனர் ரேகா ரெட்டி, ரேகன் போக் இந்தியா பவுண்டேஷன் நிர்வாகி  மதன்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் முன்னதாக ஆன்மிகச் சொற்பொழிவாளர் தனஞ்செயன் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு  தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஜெயக்குமார் பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை மற்றும் ஊக்கப்படுத்துதல் குறித்து சிறப்பாக பேசினார். அவர் பேசுகையில்;

அரசு பொதுத் தேர்வை எதிர்நோக்கியுள்ள மாணவர்கள்  வெற்றி பெற வேண்டும் உயர் கல்வி குறித்து நீங்கள் என்னவாக விரும்புகின்றீர்களோ அதை குறித்து லட்சிய பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.விடாமுயற்சியுடன்  முயற்சித்து சும்மா முயற்சி செய்து பார்ப்போம்; வந்தால் வரட்டும்; வரவில்லை என்றால் விட்டு விடுவோம் என நினைக்காமல் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். மற்றவர்களுக்காகப் படிக்கிறோம்;கிடைத்த பாடப்பிரிவைப் படிக்கிறோம் என்று இல்லாமல், குறிக்கோளுடன் படித்தால் இலக்கை அடையலாம். ஐஏஎஸ் அதிகாரி என்று இல்லை. நமது விருப்பம் எனனவோ, அதில் சிறந்தவராக மாற இடைவிடாது முயற்சி செய்யுங்கள். இன்னும் 10 ஆண்டுகள் கழித்து நிச்சயம் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான் விசாரிப்பேன் என்று பேசினார். ஆரணி மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ், செய்யாறு மாவட்ட கல்வி அலுவலர் நளினி, போளூர் மாவட்ட கல்வி அலுவலர் தயாளன், செஞ்சிலுவை சங்க மாவட்ட தலைவர் இந்திரராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் யுபிஎஸ்சி தகவல் தொழில்நுட்ப பயிற்சியாளர் காயத்ரி விஷ்ணு ஆகியோர் யுபிஎஸ்சி குறித்து விளக்கம் அளித்தனர் மற்றும் டிஎன்பிஎஸ்சி பயிற்சியாளர் சதீஷ்குமார் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து பயிற்சி ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சியை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இசை ஆசிரியர் கோமதி தொகுத்து வழங்கினார் . நிகழ்வில்  அரட்டவாடி பள்ளி தலைமையாசிரியர் சதாசிவம். பரமனந்தல் தலைமையாசிரியர் பாலமுருகன், செஞ்சிலுவை சங்க மாவட்ட அமைப்பாளர் வெங்கட்ராமன் ஆசிரியர் காரல்மார்க்ஸ், உடற்கல்வி இயக்குனர்கள் உடற்கல்வி ஆசிரியர்கள் இளையபெருமாள் சிவக்குமார் முருகன் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செங்கம் புதுப்பாளையம் தண்டராம்பட்டு போன்ற பகுதிகளிலிருந்து அனைத்து அரசுப் பள்ளி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.பள்ளி துணை ஆய்வாளர் குணசேகர் நன்றி கூறினார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!