Home செய்திகள் திருநகர் போலீசார் கல்லூரி மாணவ-மாணவியர்களுக்கு பாலியல் மற்றும் ஆன்லைன் குற்றங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு நடத்தினர்.

திருநகர் போலீசார் கல்லூரி மாணவ-மாணவியர்களுக்கு பாலியல் மற்றும் ஆன்லைன் குற்றங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு நடத்தினர்.

by mohan

தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்ற சூழலில் பல்வேறு இடங்களில் இது சம்பந்தமான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் பேரணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் பகுதியில் உள்ள நேஷனல் மேலாண்மை மற்றும் கலை கல்லூரியில் உள்ள மாணவர்களுக்கு திருநகர் காவல்துறையினர் சார்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருநகர் காவல் ஆய்வாளர் ராஜதுரை மற்றும் சார்பு ஆய்வாளர் ராஜ்குமார் இருவரும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் அவற்றை எதிர்கொள்வதற்கான உத்திகள். மேலும்., பாலியல் குற்றங்களுக்குரிய தண்டனைகள் எவ்வாறு வழங்கப்படுகிறது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதைத்தொடர்ந்து., தற்போது தமிழகத்தில் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகள் தொடர்பாகவும்., தங்கள் தொலைபேசிக்கு வரும் தேவை இல்லாத குறுஞ்செய்திகளை பார்க்க வேண்டாம் என்றும்., யாரேனும் வங்கியில் இருந்து தங்களை தொடர்பு வருவதாக கூறி உங்களுடைய ATM எண்., UPI NO உள்ளிட்டவைகளை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்., ஆன்லைன் மோசடி புகார் குறித்து 1930 என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என தனியார் கல்லூரி மாணவர்களிடையே திருநகர் காவல்துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!