Home செய்திகள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக ஜெ. குமார் பதவியேற்றுக் கொண்டார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக ஜெ. குமார் பதவியேற்றுக் கொண்டார்.

by mohan

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக ஜெ.குமாரை நியமித்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த 29 தேதி உத்தரவிட்டிருந்தார் இதைத் தொடர்ந்து காமராசர் பல்கலைக்கழகம் புதிய துணைவேந்தராக பதவி ஏற்றுக்கொண்டார்..மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றி வந்த மு.கிருஷ்ணனை கடந்த 2019 ஆண்டு திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக நியமனம் செய்து மத்திய கல்வி அமைச்சகம் கடந்தாண்டு அறிவித்தது.இதனையடுத்து பல்கலை நிர்வாக பணிகளை தற்போது ஒருங்கிணைப்பு குழுவினர் கவனித்து வந்து. இந்நிலையில் புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்ய தேடல் குழு அமைக்கப்பட்டது.அந்த தேடல் குழுவின் ஒருங்கிணைப்பாளராக அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி நியமிக்கப்பட்டிருந்தார். பேராசிரியர்கள் எம்.ராஜேந்திரன், பி.மருதமுத்து ஆகியோர் தேடல் குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.இந்த குழு சார்பில் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதிவாய்ந்த 10 பேரை நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.அவர்களிடம் நடத்திய நேர்காணலின் அடிப்படையில் மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு அந்த பட்டியலை கவர்னருக்கு அனுப்பிவைத்தனர்.இந்த நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக ஜெ.குமார் என்பவரை நியமித்து தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கடந்த இருபத்தி ஒன்பதாம் தேதி உத்தரவிட்டிருந்தார்.பேராசிரியர் பணியில் 29 ஆண்டுகள் அனுபவம் கொண்ட குமார், 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக ஜெ குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!