Home செய்திகள் மதுரை பாத்திமா கல்லூரியில் ஏப்ரல் – 1ஐ ஏப்ரல் கூல் தினமாக மாற்றும் முயற்சியில் 2022 மரம் நட்டு சாதனை.

மதுரை பாத்திமா கல்லூரியில் ஏப்ரல் – 1ஐ ஏப்ரல் கூல் தினமாக மாற்றும் முயற்சியில் 2022 மரம் நட்டு சாதனை.

by mohan

ஏப்ரல் -1 ஐ முட்டாள் தினம் என கொண்டாடும் வேளையில் இன்று ஏப்ரல் கூல் தினமாக கொண்டாடும் முயற்சியாக பாத்திமா மகளிர் கல்லூரி வளாகத்தில் இந்த ஆண்டை நினைவுபடுத்தும் விதமாக 2022 மரக்கன்றுகளை யங் இந்தியா மற்றும் பசுமை நண்பர்கள் அமைப்பினர் நட்டனர்மதுரை பாத்திமா மகளிர் கல்லூரி வளாகத்தில் இந்த மரக்கன்று நடும் விழாயங் இந்திய அமைப்பின் தலைவர் சேவுகன் அண்ணாமலைபசுமை நண்பர்கள் அமைப்பின் தலைவர் பொன் குமார் தலைமையில் நடைபெற்றது.மதுரை மேற்கு ரோட்டரி சங்கம் ராமநாதன், மதுரையின் அட்சயபாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு பாத்திமா கல்லூரி துணை முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்டோர்பங்கேற்றனர்இது குறித்து பாத்திமா கல்லூரி துணை முதல்வர் சகோதரி ஜெனிதா ராணி கூறும் போது தற்போது பாத்திமா கல்லூரி வளாகத்தில் 2500 க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளது. மேலும் உலக வெப்ப மயமாதலை தடுக்கும் விதமாகவும், ஏப்ரல் – 1 ஐ முட்டாள் தினம் ஏப்ரல் ஃபூல் என்பதை ஏப்ரல் கூல் என சொல்லும் அளவில் பசுமை மரங்களை நட்டு வளர்த்து வர யங் இந்தியா மற்றும் பசுமை நண்பர்கள் அமைப்பு மூலம் முயற்சி எடுத்திருப்பதாக கூறினார்.பாத்திமா கல்லூரி மாணவியர்கள் மரம் நடுவோம் மழை பெறுவோம் என்ற கோஷங்க ளோடு இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது பலரும் மரம் வளர்க்கும் எண்ணத்தை உருவாக்கியது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!