Home செய்திகள் உசிலம்பட்டி அருகே பட்டா இடத்தை விட்டு கொடுத்தும் ரோடு வசதி செய்து கொடுக்காத அதிகாரிகள் 1கி.மீ தார்சாலைக்காக 15 வருடமாக போராடி வரும் ஆதிதிராவிடர் மக்கள்.

உசிலம்பட்டி அருகே பட்டா இடத்தை விட்டு கொடுத்தும் ரோடு வசதி செய்து கொடுக்காத அதிகாரிகள் 1கி.மீ தார்சாலைக்காக 15 வருடமாக போராடி வரும் ஆதிதிராவிடர் மக்கள்.

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ளது பூதிப்புரம் கிராமம்.இக்கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இக்கிராம காலணிப்பகுதியிலுள்ள சுமார் 1கி.மீ தூரத்திற்கு செம்மண் ரோடு பாதை வசதி உள்ளது. இந்த பகுதிக்கு செல்ல பேருந்து ஆட்டோ போன்றவை பூதிப்புரம் கிராமத்திற்குள் வராமல் கிராம எல்லையிலேயே ஆட்களை இறக்கி விட்டு சென்று விடுவதாகக் கூறப்படுகிறது.இதனால் இரவு நேரங்களில் பெண்கள் குழந்தைகள் ஊரின் எல்லையில் இறங்கி இருட்டில் நடந்து வர வேண்டியுள்ளது.மேலும் இப்பாதை வழியாக போலியம்பட்டி, கீரிபட்டி, சின்னபாலார்பட்டி, உள்பட 10 கிராமங்களுக்கு செல்லும் இணைப்புச்சாலையாகவும் உள்ளது.இச்சாலை வழியாக 10 கிராம மக்களும் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையை சீக்கிரத்தில் சென்றடைய முடியும்.இந்த ஒரு கி.மீ சாலையை தார்சாலையாக அமைக்க வேண்டுமென கடந்த 15 வருடங்களாக பூதிப்புரம் கிராம மக்கள் போராடி வருகின்றனர்.இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனுக் கொடுத்த பின் சாலையை பார்வையிட்ட அதிகாரிகள் சாலைப்பாதை குறுகலாக இருப்பதால் (7அடி) தார்ச்சாலை அமைக்க முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.இதனால் கிராம மக்கள் சார்பில் தங்கள் சொந்த இடத்தையும் அளந்து 10 அடி சாலையாக கல்ஊன்றி விட்டுக் கொடுத்துள்ளனர்.இருந்த போதும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இந்த ஒரு கி.மீ சாலை வசதி இல்லாததால் 10 கிராமமக்கள் பல கி.மீ தூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. இதனால் ஒரு கி.மீ தூரம் உள்ள சாலையை தார்ச் சாலையாக மாற்றித்தர வேண்டுமென கிராமமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!