Home செய்திகள் தென்காசியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி; தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்..

தென்காசியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி; தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்..

by mohan

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சிகள் நடந்தது. அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா. ஜெஸ்லின் குத்துவிளக்கு ஏற்றி கண்காட்சியை துவக்கி வைத்தார். வியாழக்கிழமை 9.00 தொடங்கி 2.00 மணிவரை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்ட இணை இயக்குனர் மருத்துவர் வெங்கட்டரங்கன் முன்னிலை வகித்தார். அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா. ஜெஸ்லின் குத்துவிளக்கு ஏற்றி கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

அரசு மருத்துவமனையுடன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் தென்காசி மாவட்ட பணியாளர்களும் இணைந்து இக்கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தனர். திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயசூர்யா மற்றும் தென்காசி மாவட்ட திட்ட அலுவலர் முத்துமாரியப்பன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், ஆலங்குளம், கீழப்பாவூர் ஆகிய வட்டாரத்திலுள்ள அங்கன்வாடி குழந்தைகள் மைய பணியாளர்கள் ஒவ்வொரு சிறு தானியங்கள் மூலமும் பல்வேறு வகையான உணவு பொருட்கள் தயார் செய்து கண்காட்சியில் வைக்கப்பட்டது. மேலும் இயற்கையான காய்கறிகள், கீரைகள், பழங்கள், பயறு வகைகள் மூலம் கிடைக்கப் பெறும் ஊட்டச்சத்துக்கள் பற்றி மக்களுக்கு தெளிவாக புரியும் வகையில் கண்காட்சியில் வைக்கப்பட்டது. குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கு ஊட்டச்சத்து நல கல்வி மூலம் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் அனைவரும் ஊட்டச்சத்து குறைபாடில்லா சமுதாயத்தினை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியினை தென்காசி வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தான்யா, மேற்பார்வையாளர் மற்றும் திட்ட உதவியாளர் அஞ்சு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிமுறைகள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழிமுறைகள், கர்ப்பிணி தாய்மார்கள் ரத்தசோகை வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றிய துண்டு பிரசுரங்களை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் பொதுமக்களுக்கு வழங்கினார். மருத்துவமனைக்கு வந்திருந்த அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சத்தான கஞ்சி, ஊட்டச்சத்து பணியாளர்கள் மூலம் தயார் செய்து வழங்கப்பட்டது. தென்காசி மருத்துவமனையின் உறைவிட மருத்துவர் ராஜேஷ்,தென்காசி வட்டார மருத்துவ அலுவலர் இப்ராகிம், மூத்த பல் மருத்துவர் லதா,மகப்பேறு நிபுணர் மருத்துவர் புனிதவதி, மரு.மல்லிகா அனைத்து துறை மருத்துவர்கள், செவிலிய கண்காணிப்பாளர்கள்,செவிலியர்கள், மருந்தாளுனர்கள், நுண்கதிர் வீச்சாளர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.இறுதியில் மூத்த மருத்துவர் கீதா நன்றி கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!