Home செய்திகள் இராமநாதபுரத்தில் ரத்த தானம் தைராய்டு, சர்க்கரை பரிசோதனை முகாம்.

இராமநாதபுரத்தில் ரத்த தானம் தைராய்டு, சர்க்கரை பரிசோதனை முகாம்.

by mohan

இராமநாதபுரத்தில் பிவிஎம் அறக்கட்டளை மருத்துவ சேவை அணி சார்பில் ரத்த தானம் மற்றும் தைராய்டு சர்க்கரை ரத்த பரிசோதனை முகாம் நடந்தது. ராமநாதபுரம் நகராட்சி தலைவர் ஆர்.கே. கார்மேகம் துவக்கி வைத்தார். மருத்துவ சேவை அணி மாவட்ட தலைவர் யாசர் அரபாத் தலைமை வகித்தார். பிவிஎம் அறக்கட்டளை தலைவர் அப்துல் ரசாக், ஆசி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தலைவர் டாக்டர் ஆசிக் அமீன், தேவிபட்டினம் ஊராட்சி முன்னாள் தலைவர் ஜாகீர் உசேன், பொட்டகவயல் ஊராட்சி தலைவர் ஹக்கீம், வழக்கறிஞர் அப்துல் ஹாலிது ஆகியோர் பேசினர். முகமது ஹனீப் வரவேற்றார். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டாக்டர் சவுமியா நாச்சியார் தலைமையில் மருத்துவ குழுவினர் ரத்தம் சேகரித்தனர். 30 பேர் ரத்த தானம் செய்தனர். அவசர தேவைக்கு ரத்த தானம் செய்ய தன்னார்வலர் 60 பேர் பெயர் பதிவு செய்தனர். 50க்கும் மேற்பட்டோருக்கு தைராய்டு, சர்க்கரை பரிசோதனை செய்யப்பட்டது.குருதி கொடையாளர்களுக்கு பிவிஎம் அறக்கட்டளை சார்பில் சான்று வழங்கப்பட்டது. பிவிஎம் அறக்கட்டளைக்கு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை சார்பில் சான்று வழங்க ப்பட்டது.கொரோனா காலத்தில் சமூக சேவையாற்றிய பலருக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது.ராமநாதபுரம் மாவட்ட சமூக ஆர்வலர் அன்வர் அலி, விசிக மண்டல செயலாளர் முகமது யாசின், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் வருசை முஹமது, மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் காசிநாத துரை, ராமநாதபுரம் நகர் வர்த்தக சங்க துணை தலைவர் கவிஞர் தஸ்லிம் ஹாஜா, கே.கே வலசை ஜமாத் தலைவர் அமானுல்லா, முன்னாள் தலைவர் அப்துல் அஜீஸ், எஸ்டிபிஐ மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல், திக மாவட்ட செயலர் அண்ணா ரவி, வளைகுடா வாழ் தமிழர் நலச்சங்க நிறுவன தலைவர் நம்புதாளை பாரிஸ், தாய்ப்பாசம் அறக்கட்டளை பாதுஷா நூருல் சமது, சமூக ஆர்வலர்கள் சாகுல்ஹமீது, அமீர் அம்சா, அதிமுக நகர் துணை செயலர் ஆரிப் ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.தலைவர் ஹாஜி பக்கீர் முகமது, திட்ட இயக்குநர் ஹாஜி அல்தாப் உசேன் ஆகியோர் வழிகாட்டல் படி,மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் சீனி அன்வர், மாவட்ட துணைத் தலைவர் குமார், மாவட்ட பொருளாளர் அபுல் ஹஸன், மாவட்டத் துணைச் செயலாளர் ஹபீப் ரஹ்மான், மாவட்ட துணைச் செயலர் உஸ்மான், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அகமது இப்ராஹிம், செய்யது அகமது, சாகுல் ஹமீது, நகர் தலைவர் முகமது ஜனாஸ், நகர் செயலர் செய்யது ராஜா முகமது, நகர் துணை தலைவர் சதாம் உசேன், நகர் பொருளாளர் மனோஜ்குமார், முகமது யூனுஸ் கான், மன்சூர், முருகேசன், சிவராஜா ஆகியோர் செய்து இருந்தனர். முகமது கனி நன்றி கூறினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!