Home செய்திகள் ஒளிமின் விளைவு தொடர்பான ஆராய்ச்சி மேற்கொண்ட, நோபல் பரிசு வென்ற அமெரிக்க இயற்பியலறிஞர், இராபர்ட் மில்லிகன் பிறந்த தினம் இன்று (மார்ச் 22, 1868).

ஒளிமின் விளைவு தொடர்பான ஆராய்ச்சி மேற்கொண்ட, நோபல் பரிசு வென்ற அமெரிக்க இயற்பியலறிஞர், இராபர்ட் மில்லிகன் பிறந்த தினம் இன்று (மார்ச் 22, 1868).

by mohan

இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன் (Robert A. Millikan) அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலம் மோரிசன் நகரில் மார்ச் 22, 1868ல் பிறந்தார். இவரது தந்தை தேவாலயத்தில் மதகுரு வாக இருந்தார். அயோவா மாநிலத்தில் உள்ள மக்கோகிடா உயர்நிலைப் பள்ளியில் மில்லிகன் பயின்றார். பள்ளிப் படிப்புக்கு பிறகு, நீதிமன்றத்தில் சிறிது காலம் பணிபுரிந்தார். 1891ல் ஓபர்லின் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தார். கிரேக்கமும் கணிதமும் இவருக்கு மிகவும் பிடித்த பாடங்களாக இருந்தன. 1893ல் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1895ல் மின் ஒளிர்வு தளங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். அங்கு இத்துறையில் முதன் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் இவர்தான்.

ஒளிமின்னழுத்த விளைவை விவரிக்க 1905 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அறிமுகப்படுத்திய சமன்பாட்டின் சோதனை சரிபார்ப்பை 1914 ஆம் ஆண்டில் மில்லிகன் இதே போன்ற திறனுடன் எடுத்துக் கொண்டார். பிளாங்கின் மாறிலியின் துல்லியமான மதிப்பைப் பெற அவர் இதே ஆராய்ச்சியைப் பயன்படுத்தினார். 1921 ஆம் ஆண்டில் மில்லிகன் சிகாகோ பல்கலைக்கழகத்தை விட்டு கலிபோர்னியாவின் பசடேனாவில் உள்ள கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜில் (கால்டெக்) இயற்பியலின் நார்மன் பிரிட்ஜ் ஆய்வகத்தின் இயக்குநரானார். இயற்பியலாளர் விக்டர் ஹெஸ் விண்வெளியில் இருந்து வருவதைக் கண்டறிந்த கதிர்வீச்சு குறித்து அங்கு ஒரு பெரிய ஆய்வை மேற்கொண்டார். இந்த கதிர்வீச்சு உண்மையில் வேற்று கிரக தோற்றம் கொண்டது என்பதை மில்லிகன் நிரூபித்தார், மேலும் அவர் அதற்கு “அண்ட கதிர்கள்” என்று பெயரிட்டார்.

மின்சாரம், ஒளியியல், மூலக்கூறு இயற்பியல் ஆகிய துறைகளில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு முக்கியத்துவம் வாய்ந்த கோட்பாடுகளை வெளியிட்டார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் 1910 முதல் 1921 வரை பேராசிரியராகப் பணியாற்றினார். பாடப் புத்தகங்கள் எழுதுவது, இயற்பியலை எளிமையாகக் கற்பிக்கும் முறைகளை மேம்படுத்துவது ஆகிய பணிகளில் ஈடுபட்டார். தனியாகவும் பிற வல்லுநர்களுடன் இணைந்தும் ஏராளமான புத்தகங்களை எழுதினார். ஒளிமின் விளைவு தொடர்பான அவரது கண்டுபிடிப்புகள், கூற்றுகள் ஆகியவை தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பயனுள்ளதாக அமைந்தன. எண்ணெய்த் துளி சோதனை மூலம் எலக்ட்ரானின் மின்சுமையை அளக்கும் ஆய்வு மற்றும் ஒளிமின் விளைவு குறித்து அவர் மேற்கொண்ட ஆய்வுக்காக 1923ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்காவின் தேசிய ஆராய்ச்சிக் கழகத்தில் துணைத் தலைவராக பணியாற்றினார். அப்போது நீர்மூழ்கிப் போர்க் கப்பல்கள், வானியல் ஆராய்ச்சிக் கருவிகளை மேம்படுத்தும் பணியில் முக்கிய பங்காற்றினார். பல கல்வி நிறுவனங்கள், இயற்பியல் ஆராய்ச்சி மையங்களில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார். ஏறக்குறைய 25 பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கியுள்ளன. அது மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த அமைப்புகளிடம் இருந்து ஏராளமான விருதுகள், பரிசுகளைப் பெற்றுள்ளார். அறிவியலறிஞர் மட்டுமல்லாமல் சிறந்த மதவாதியாகவும், தத்துவஞானியாகவும் விளங்கிய மில்லிகன் இறுதிமூச்சு வரை இயற்பியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார். டிசம்பர் 19, 1953ல் தனது 85வது அகவையில் சான் மாரினோ, கலிபோர்னியா, அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். அமெரிக்காவில் பல பள்ளிகள், பொது இடங்களுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!