Home செய்திகள் மதுரை வந்த தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி .

மதுரை வந்த தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி .

by mohan

 தமிழக விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் பதக்கம் பெறவும், கிழக்கு கடற்கரை சாலையை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் ஆறு வழி சாலை அமைக்கப்படும் மதுரை விமான நிலையத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேட்டி..சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.அப்போது தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார் தற்போது தாழ்த்தப்பட்ட, அடித்தட்டு ஏழை மக்களின் வாழ்வு உயரக் கூடிய நிலையிலும், ஒட்டுமொத்த மக்களின் வளர்ச்சிக்காக கொண்டு செல்லும் நிதிநிலை அறிக்கையை தற்போது முதலமைச்சர் தந்துள்ளார்.விளையாட்டு துறைக்கு தேவையான நிதியை தமிழக முதலமைச்சர் வழங்கியுள்ளார்.ஒலிம்பிக் தங்கப் பதக்க தேடல் முக்கியமான பைலட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் ஒலிம்பிக் தமிழக வீரர் வீராங்கனைகளை தயார் படுத்தும் சிறப்பு வாய்ந்த திட்டத்தை தமிழக முதல்வர் அறிமுகப்படுத்தியுள்ளார்.சதுரங்க ஒலிம்பிக் போட்டியை தமிழகத்தில் நடத்துவதற்கான அனுமதியை முதலமைச்சர் பெற்று தந்துள்ளார். குறிப்பாக அகில இந்திய சதுரங்க கூட்டமைப்போடு இணைந்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.தமிழகத்தில் உள்ள விளையாட்டு மைதானங்களை உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான திட்டத்தையும் முதலமைச்சர் அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை ஆறு வழிச்சாலையாக மாற்றப்படும் போது சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பது குறித்த கேள்விக்கு..தமிழக முதல்வர் சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் முழு கவனம் செலுத்தி வருகிறார்.சுற்றுச்சூழல் துறை என்ற பெயரை மாற்றி சுற்றுச்சூழல் காலநிலை மற்றம் என்ற பெயர் மாற்றம் செய்து கொண்டு செல்கிறார். கடந்த 10கால ஆட்சியில் மண்ணை மணல் ஆகும் என்ற எந்த ஒரு திட்டத்தையும் அமல்படுத்தாமல் தமிழகத்தை பாதுகாக்கும் ஒரு முதல்வர் கிழக்கு கடற்கரை சாலையை அமைக்கும்போது சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என சுற்றுசூழல் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!