Home செய்திகள் செங்கத்தில் உக்ரைன் மீதான போரை நிறுத்த வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் அமைதி விழிப்புணர்வு.

செங்கத்தில் உக்ரைன் மீதான போரை நிறுத்த வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் அமைதி விழிப்புணர்வு.

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பாரத் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில்  உக்ரைன் மீதான போரை நிறுத்த வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் அமைதி விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றதுஉக்ரைனில் ஏற்பட்டுள்ள சூழலால் பல்வேறு நாடுகள்  கவலையடைந்துள்ளநிலையில்.  போரினை உடனடியாக நிறுத்த அனைத்து ‘முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு அமைதி நிலவ வேண்டும் இதனை வலியுறுத்தி பள்ளி மாணவ மாணவியர்கள் “போரை நிறுத்துங்கள்” “அமைதி நிலவட்டும்” என்ற பல்வேறு வாசகங்கள் உள்ளடக்கிய பதாகை ஏந்தி அமைதி விழிப்புணர்வு மற்றும் பேரணி சென்றனர். நிகழ்விற்கு பள்ளி முதல்வர் கவியரசன் தலைமையில் நடைபெற்றது பாரத சாரண இயக்கம் ,இளம் செஞ்சிலுவை சங்கம் ,தேசிய பசுமை படை ஆகிய மூன்று அமைப்புகளும் சேர்ந்த பள்ளி மாணவ மாணவியர்கள் பேரணியாக சென்றனர் பேரணியில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பள்ளி பள்ளி முதல்வர் கவியரசன் பேசுகையில்;இந்திய அரசு நம் நாட்டு மக்களைத் தாயகம் கொண்டுவருவது வரவேற்கத்தக்கது. ஆனால், உக்ரைனில் உள்ளவர்களும் மனிதர்கள்தான், அவர்களையும் காப்பாற்ற வேண்டும். அதற்காக இந்திய அரசு இரண்டு நாடுகளிடமும் பேசித் தீர்வுகாண வேண்டும் என்றுபேசினார்.பள்ளி வளாகத்தில் போரினால் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!