Home செய்திகள் பள்ளிக் கல்வித் துறை சார்பில் “கற்றல் இனிதே” மின் இதழ் வெளியீட்டு விழா.

பள்ளிக் கல்வித் துறை சார்பில் “கற்றல் இனிதே” மின் இதழ் வெளியீட்டு விழா.

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மகிழ் திருவிழா மாவட்ட கல்வி அலுவலர் முனைவர் கு.அரவிந்தன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.தண்டராம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி முருகேசன் ஒன்றிய குழு உறுப்பினர் வித்யா தேவேந்திரன் பள்ளி மேலாண்மை குழு தலைவர் வினோதினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் முன்னதாக தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அழகிரி அனைவரையும் வரவேற்று பேசினார். செங்கம் கல்வி மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் “கற்றல் இனிதே” மின்னிதழ் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.மாவட்ட கல்வி அலுவலர் கு.அரவிந்தன் “கற்ற இனிதே” மின்னிதழ் வெளியிட மாவட்ட சமூக நல அலுவலர் மீனாம்பிகை, ஒன்றியக்குழு தலைவர் பரிமளா கலையரசன் ஆகியோர் முதல் பிரதியை பெற்றுக்கொண்டனர்.விழாவில் மாவட்ட சமூக நல அலுவலர் மீனாம்பிகை, ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன், காவல் ஆய்வாளர் தனலட்சுமி, தண்டராம்பட்டு ஊராட்சி ஆணையாளர் நிர்மலா, வழக்கறிஞர் சாந்தகுமாரி அறவாழி, ஆகியோர் மகளிர் தின விழாவை குறித்து மகளிர் சாதனைகளையும், முன்னேற்றம் பற்றியும் சிறப்புரையாற்றினர் பின்னர் பள்ளி மாணவர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி மாணவர்களின் கலை நிகழ்ச்சி கதை சிறப்பாக செய்திருந்தனர் விழாவில் செங்கம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் முருகன், அரட்டவாடி பள்ளி தலைமையாசிரியர் சதாசிவம், சாரணர் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் ஜே ஆர் சி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் வெங்கட்ராமன், தேசிய மாணவர் படை அலுவலர், தேசிய பசுமை படை பொறுப்பாளர், இளம் தொழிற்கல்வி ஒன்றிய பொறுப்பாளர் அரசு, மற்றும் அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் முடிவில் வட்டார கல்வி அலுவலர் செல்வம் நன்றி கூறினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!