Home செய்திகள் மதுரையில் இலங்கை தமிழர்களின் மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகையுடன் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்கம்.

மதுரையில் இலங்கை தமிழர்களின் மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகையுடன் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்கம்.

by mohan

மதுரை அழகர் கோயில் செல்லும் வழியில் கடச்சனேந்தல்அருகே தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம் மற்றும் இந்திய தொழில் தொடர்பு கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் இணைந்து இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் கல்வி கற்று வேலைவாய்ப்பில்லாமல் இருக்கும இளைஞர், இளம் பெண்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் திட்டம் துவங்கப்பட்டு உள்ளது.இதில் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்த 18-35 வயது வரை உள்ள இளைஞர், இளம் பெண்கள் இந்த பயிற்சியில் இணைந்து பயன் பெறலாம்,இந்த பயிற்சி வகுப்புகள் 3 மாதம் நடத்தப்படும், பயிற்சியின் போது இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சர்வீஸ், டெக்னிஷீயன், ஆட்டோமைபொல் தொடர்பான பயிற்சிகள் வழங்கபட உள்ளன.இந்த பயிற்சிக்கு வரும் இலங்கை தமிழர் மாணவர்களுக்கு தினமும் ரூபாய் 100 உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத் துறை இந்திய தொழில் தொடர்பு கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம் இணைந்துஒரு நாளைக்கு 6 மணி நேரம் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.இதனை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தின் அதிகாரி தமிழ்ச் செல்வி கலந்து கொண்டு துவங்கி வைத்தார்.இதில் கலந்து கொண்டு பயிறசி பெற ஆர்வமுள்ளவர்கள் 8925237603 என்ற எண்ணில் அழைக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!