Home செய்திகள் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி துணைத் தலைவர் தேர்தலில் பரபரப்பு.

அம்மையநாயக்கனூர் பேரூராட்சி துணைத் தலைவர் தேர்தலில் பரபரப்பு.

by mohan

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் திமுக நகர செயலாளராக இருப்பவர் எஸ்.பி.எஸ். செல்வராஜ் என்பவர் ஒரு கோஷ்டியாகவும்,  திமுக மாவட்ட துணை செயலாளர் நாகராஜன் என்பவர் ஒரு கோஷ்டியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.  இந்நிலையில், நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வேட்பாளர்களை செல்வராஜ் தேர்வு செய்தார். இதேபோல் நாகராஜன் தரப்பின்  வேட்பாளர்களை தேர்வு செய்தனர். இதில், இரு கோஷ்டிகளை  அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய, மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஐபி.செந்தில்குமார் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் இரு கோஷ்டிக்கும்   சரிபாதியாக 9 வார்டுகளை பிரித்து கொடுத்து வேட்பாளரை நிறுத்த சொன்னார். அதன்படி 18 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் நாகராஜன் சார்பில் 9 பேரும், எஸ்.பி.எஸ். செல்வராஜ் சார்பில் 9 பேர் போட்டியிட்டனர். இதில், திமுக வேட்பாளர்கள் 12, அதிமுக வேட்பாளர்கள் 2, சுயச்சை 4 பேர் என மொத்தம் 18 பேர் வெற்றி பெற்றனர். இதில் இன்று வெள்ளிக்கிழமை  நடைபெற்ற தலைவர் துணைத்தலைவர் மறைமுக தேர்தலில், அம்மையநாயக்கனூர் பேரூராட்சி தலைவராக, பேரூர் கழக செயலாளர்  எஸ்.பி.எஸ்.செல்வராஜ் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், துணைத்தலைவர் வேட்பாளராக மாவட்ட துணைச் செயலாளர் நாகராஜன் மகனும் பேரூராட்சி கவுன்சிலருமான மான விமல்குமார்  அறிவிக்கப்பட்டார். இதற்கு எஸ்.பி.எஸ்.செல்வராஜ் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில்,   விமல்குமாரை போட்டியின்றி தேர்வு செய்ய இருந்த நிலையில், திடீர் என, திமுக கவுன்சிலர் கவிதா என்பவர்  போட்டியிட்டார். இதில், திமுக வேட்பாளர் விமல்குமார் 12 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயலட்சுமி அறிவித்தார். இவரை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்ட திமுக கவுன்சிலர்  கவிதா 5 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். ஒரு ஓட்டு செல்லாத ஓட்டு என, அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அம்மையநாயக்கனூர் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட விமல்குமாருக்கு எதிராக திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விமல்குமாரின் தந்தை மாவட்ட துணைச் செயலாளர் நாகராஜனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அலுவலகம் முன்பு பெரும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகவினரை அம்மையநாயக்கனூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி அமைதிப்படுத்தி ஒழுங்குபடுத்தினார். இதுகுறித்து திமுக கவுன்சிலர்கள் கூறுகையில், எங்களை வாக்குப்பதிவு நடைபெற்ற இடத்தில் மாவட்ட துணைச் செயலாளர் நாகராஜன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு காமாட்சி, மற்றும் ஒன்றிய செயலாளர் சௌந்தரபாண்டியன் உள்ளிட்டோர் உள்ளே இருந்து கொண்டு, எங்களை மிரட்டி விமல்குமாருக்கு வாக்களிக்க சொன்னதால், வாக்களித்தோம் என்றனர். மேலும், இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுவதாக அவர்கள் கூறினர். இதுகுறித்து திமுக 9-வது செயலாளர் திருமுருகன் கூறுகையில், இது முறையற்ற தேர்தல். துணை தலைவர் தேர்வு செய்யப்பட்ட விமல்குமாரை திமுகவினர் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இந்த துணைத்தலைவர்  தேர்தலை ரத்து செய்ய வேண்டும். இல்லை என்றால் திமுக கவுன்சிலர்கள் அனைவரும் ராஜினாமா செய்வோம் என, கூறினார். இதனால், இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!