Home செய்திகள் மாசற்ற அலுவலக வாரம்-பயணநாள் கடைபிடிக்க ஓர் விண்ணப்பம்.

மாசற்ற அலுவலக வாரம்-பயணநாள் கடைபிடிக்க ஓர் விண்ணப்பம்.

by mohan

காற்று மாசு, சுகாதரத்திற்கு பெரும் சுற்றுச்சூழல் ஆபத்து என்பதும், அதனால் உலக அளவில் வருடத்திற்கு 2 மில்லியன் மக்கள் அகால மரணம் அடைகின்றனர். (உலக சுகாதார நிறுவனம் 2005) என்பதும் தாங்கள் அனைவரும் அறிவீர்கள்.படிம எரிபொருள் பயன்படுத்துவதால், உருவாகும் வாகன மாசு நகரங்களில் காற்று மாசு ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.மேலும் ,பெரும் நகரங்களில் காற்று மாசில், 72 வாகன மாசு உள்ளது என, கணக்கீடு செய்து மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.வாகனங்களில் எரிக்கும் செயல்முறையின் பொது வெளியேறும் கார்பன் மொனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, ஹைட்ரோகார்பன், சல்பர் டை ஆக்சைடு மற்றும் நுண்துகள்கள் மனித சுகாதாரத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கிறது. இச்சுகாதாரக்கேடு சுவாச அமைப்பிற்கு லேசானது முதல் கடும் எரிச்சலையும், தலைவலி, குமட்டல், கண் எரிச்சல், நுரையீரல் திறன் குறைதல், உடல் பாதுகாப்பு நலிவடைதல் மற்றும் புற்றுநோயை உண்டாக்குகிறது.தமிழ்நாட்டின் சட்டப்பூர்வமான அமைப்பான தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், காற்று மாசினை கட்டுப்படுத்த பல்வேறு பசுமை முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.அதன் முதல் முயற்சியாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அதன் அனைத்து பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் மாசற்ற அலுவலக வாரம் – பயண நாள் ( புதன் கிழமை) என கடைபிடித்து தனிநபர் மோட்டார் வாகனங்களை பயன்படுத்துவது இல்லை என்று முடிவெடுக்கப்பட்டு அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்களும் வாரந்தோறும் புதன்கிழமை அன்று பொது போக்குவரத்து மூலமோ அல்லது நடந்தோ அல்லது சைக்கிள்ஃமின் சைக்கிள் வாகனங்களின் மூலம் அலுலகத்திற்கு வருகிறார்கள்.எனவே ,மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் அனைவரும் வாரந்தோறும் புதன் கிழமை அன்று தனிநபர் மோட்டார் வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்த்து, பொது போக்குவரத்து மூலமோ அல்லது நடந்தோ அல்லது சைக்கிள் அல்லது மின் சைக்கிள்ஃவாகனங்களின் மூலம் அலுவலகத்திற்கு வருமாறும் மேலும் தங்களது அலுவலகங்களுக்கு வருகை தரும் பார்வையாளர்கள் அனைவரும் மேற்கூறியவற்றை கடைபிடிக்க தெரிவித்துக் கொள்கிறார்.இது ஒரு சிறுபடியென்றாலும் சுற்றுச்சூழலை காக்கும் பயணத்தின் துவக்கமாகும் என, மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!