Home செய்திகள்உலக செய்திகள் தேசிய அறிவியல் வார விழாவில் பரிசு வென்ற புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி மாணவிகள்.

தேசிய அறிவியல் வார விழாவில் பரிசு வென்ற புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி மாணவிகள்.

by mohan

தேசிய அறிவியல் நாள், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28 ஆம் நாள் இராமன் விளைவைக் கண்டறிந்ததன் நினைவாகக் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு நிகழ்வாக சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டு கால அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனைகள் என்ற தலைப்பில் இந்திய அரசால் பிப்ரவரி 22 முதல் 27 வரை அறிவியல் வார விழா இந்தியா முழுவதும் 75 இடங்களில் நடைபெற்றது. திருச்சியில் இந்த விழா பிஷப் ஹீபர் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது. புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி இயற்பியல் துறை இளநிலை மூன்றாம் ஆண்டு மாணவி செல்வி. இரா.மீரா முன்னேற்றப்பாதையில் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அடுத்த 25 ஆண்டுகள் என்ற தலைப்பில் தமிழில் உரை நிகழ்த்தி முதல்தர இடத்தை பிடித்தார். இயற்பியல் துறை முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவி செல்வி. ம.சரண்யா மற்றும் இல.அபிராமி இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நவீனமயம் மைல்கற்கள் என்ற தலைப்பில் ரங்கோலி போட்டியில் பங்கேற்றனர். இயற்பியல் துறை முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவி செல்வி. ம.சரண்யா மற்றும் செல்வி. சீ.தாரா அடுத்த 25 ஆண்டுகளில் இந்திய அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றம் என்ற தலைப்பில் ஆங்கில உரை சிறப்பாக நடத்தினர்.இயற்பியல் துறை இளநிலை இரண்டாம் ஆண்டு மாணவி செல்வி. த.அருள்ஜோதி மற்றும் செல்வி. ப.கீர்த்தனா 21ம் நூற்றாண்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் கண்காட்சி போட்டி, இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் நவீன மைல்கற்கள் என்ற தலைப்பில் ரங்கோலி போட்டி மற்றும் இந்திய அறிவியல் தொழில்நுட்பம் முன்னேற்றம் என்ற தலைப்பில் போஸ்டர் போட்டி ஆகியவற்றில் பங்கு பெற்றனர். இயற்பியல் துறை முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவி செல்வி. ஜே.தமிழ் செல்வி மற்றும் மூன்றாம் ஆண்டு செல்வி. வெ.நந்தினி இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் நவீனமயமாக்கல் என்ற தலைப்பில் பெயிண்டிங் போட்டியில் பங்கு பெற்றனர்.இப்போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற அனைத்து மாணவிகளையும் கல்லூரி தலைவர் பொறியாளர் பொன்.பாலசுப்பிரமணியன், கல்லூரி செயலர் திரு.பொன். ரவிச்சந்திரன் கல்லூரி முதல்வர் முனைவர் பொன்பெரியசாமி மற்றும் கல்லூரி சுயநிதி பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர். மீனாட்சி சுந்தரம் ஆகியோர் பாராட்டினர். இப்போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இயற்பியல் துறை உதவி பேராசிரியர் பொ.ரமேஷ் செய்திருந்தார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!