Home செய்திகள் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்கம் சார்பில் சாவி ஒப்படைக்கும் போராட்டம்.

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்கம் சார்பில் சாவி ஒப்படைக்கும் போராட்டம்.

by mohan

மதுரை மாவட்டத் தலைவர் பாரூக் அலிநன்றியுரையாற்றினார்.இந்த நிகழ்விற்கு பின்னர்,செய்தியாளர்களை சந்தித்த மாநில பொதுச் செயலாளர் காமராஜ் பாண்டியன், மதுரை, புதுக்கோட்டை, ராம்நாடு தேனி சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களை உள்ளடக்கி போராட்ட ஆயத்த விளக்க பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.இந்த கூட்டத்தின், வாயிலாக வருகின்ற 7.3.2022 முதல் சங்கங்களின் சார்பில் ரேஷன் கடை சாவிகளை மண்டல இணைப்பதிவாளர்களிடம் ஒப்படைத்துவிட்டு, தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.எங்களுடைய முக்கியமான கோரிக்கைகளான கடந்த 2011 ஆம் ஆண்டு கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு ஓய்வு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் கடந்த அரசு வெளியிட்ட பின்னரும் அமல்படுத்தப்படவில்லை . இந்த கோரிக்கையை உடனடியாக அமுல்படுத்தப்படும் என்றும், அதே போன்று ரேஷன் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள், மற்றும் பணியாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கடந்த அகவிலைப்படி வழங்க வேண்டும் . அது தொடர்ந்து, வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்ட 14 சதவீத அகவிலைப்படியை விற்பனையாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை, இதை உடனடியாக அளித்திட வேண்டும். இதற்கு அடுத்த கட்டமாக 5 பவுன் நகை கடன் தள்ளுபடி திட்டத்தை பொறுத்தவரை இறுதி பயனாளிகள் பட்டியலை உடனடியாக வெளியிட்டு பட்டியலின் அடிப்படையில் உள்ள தொகையினை கூட்டுறவு சங்கங்களின் உடைய நலன் கருதி உடனடியாக அரசு அறிவித்து அதன் பின்னர் அவைகளை பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம் என்பதை, தெரிவித்துக் கொண்டார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!