Home செய்திகள் மதுரையில் ஜெ பிறந்த தினம்.

மதுரையில் ஜெ பிறந்த தினம்.

by mohan

மதுரையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவானது, மதுரை நீதிமன்றம் அருகே உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய, முன்னாள் அமைச்சர் மாவட்டச் செயலர் செல்லூர் கே ராஜூ மற்றும் மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் எம் எஸ் பாண்டியன், மாவட்ட துணைச்செயலாளர் வில்லாபுரம் ராஜா, முன்னாள் மேயர் திரவியம் ,மாவட்ட முன்னாள் மண்டல தலைவர் சண்முகவள்ளி மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர்… இதேபோன்று மற்றொரு நிகழ்ச்சியில்…….ஆள் அதிகார பலத்தை எதிர்த்து அதிமுகவினர் களத்தில் போராடியுள்ளனர்:திமுகவின் வெற்றி நிரந்தரமல்ல அதிமுக தோல்வி நிரந்தரமல்ல:அதிமுகவுக்கு எதிர்காலம் இல்லைஎன்று நாக்கில் நரம்பு இல்லாமல் பேசுவதா:முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி:மதுரை:முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 74- வது பிறந்த நாளை முன்னிட்டு, திருமங்கலம் அருகே டி.குண்ணத்தூரில் உள்ள அம்மா கோவிலில் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து அதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானத்தினை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். இதனைத் தொடர்ந்து அவர் கூறியதாவது:இந்தியாவிலே பெண் முதலமைச்சராக ஆறு முறையும், அதேபோல் எதிர்க்கட்சித் தலைவராகவும் அதேபோல் 23 ஆண்டுகாலம் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார். எம்ஜிஆர் காலத்தில் 14 லட்சம் தொண்டர்கள் இருந்தனர். அதனை ஒன்னறை கோடி தொண்டர்களாக உருவாக்கி 3வது பெரிய இயக்கமாக இந்த இயக்கத்தை உருவாக்கினார்.50 ஆண்டுகால அதிமுக வரலாற்றில் திமுக பலமுறை அதிமுகவிடம் அதிக அளவில் தோல்வியை கண்டுள்ளது. 1991 சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதி மட்டும் தான் ஜெயித்தார். அதே போல், 2011 தேர்தலில் கூட அதிமுக 146 இடங்களைப் பெற்றது திமுக வெறும் 23 இடங்களை தான் பெற்றது. எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட அன்றைக்கு திமுக பெறவில்லை.தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலிலும் மாபெரும் வெற்றியை அதிமுக பெறறது .2016 தேர்தலில் கூட தனித்து நின்று வெற்றி பெற்றது. அதே போல், இருந்தது 2021 சட்டமன்ற தேர்தலில் பல்வேறு பொய்யான வாக்குறுதி அளித்துவிட்டு குறைந்த அளவில்தான் திமுக வெற்றி பெற்றது.தற்போது, நடைபெற்றநகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியின் ஆள் அதிகார,பணபலம் ஆகியவற்றை எதிர்த்து களத்தில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பல்வேறு இடங்களில் அதிமுக வெற்றியை தட்டிப் பறிக்கப் பட்டது.21 மாநகராட்சி, 138 நகராட்சி, 430 பேரூராட்சி உள்ளிட்ட இடங்களில் திமுகவிற்கு சிம்மசொப்பனமாக அதிமுக வேட்பாளர்கள் இருந்து பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். திமுக பெற்ற வெற்றி நிரந்தரமல்ல அதிமுகவின் தோல்வி நிரந்தரம் அல்ல, ஆனால் அதிமுக எதிர்காலம் இல்லை என்று நாக்கு நரம்பு இல்லாமல் சிலர் பேசி வருகின்றனர்.ஆகவே ,நிச்சயம் திமுகவிற்கு மூக்கணாங்கயிறு தேவைப்படும் போது நிச்சயம் அதிமுகவிற்கு மக்கள் வாக்களிப்பார்கள். தொடர்ந்து, அதிமுக மக்கள் பணியாற்றும் தோல்வியைக் கண்டு நாங்கள் துவள மாட்டோம் தொடர்ந்து தொண்டர்கள் தொடர்ந்து களப்பணி ஆற்றுவார்கள் .திமுகவின் அடக்குமுறை எல்லாம் சமாளித்து அதிமுகவை கழக ஒருங்கிணைப்பாளர்கள்இந்த இயக்கத்தை வழி நடத்தி வருகிறார்கள்.நிச்சயம் வருகின்ற தேர்தல் காலங்களில் அதிமுக வெற்றி பெறும் அந்தச் சூழ்நிலையை மக்களைக் உருவாக்குவார்கள் என்று கூறினார். நிகழ்சியில், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில, மாவட்ட ,ஒன்றிய, நகர, பேரூர் வட்ட கிளை கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.முன்னதாக, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க சமையல்காரர்கள் சேர்ந்து தனது முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தனது குடும்பத்துடன் சேர்ந்து உணவு தயாரித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!