Home செய்திகள் ஒட்டன்சத்திரத்தில் கொள்ளையடித்த சென்ற  கார் அம்மையநாயக்கனூர் அருகே அனாதையாக நின்றது

ஒட்டன்சத்திரத்தில் கொள்ளையடித்த சென்ற  கார் அம்மையநாயக்கனூர் அருகே அனாதையாக நின்றது

by mohan

திண்டுக்கல் மாவட்டம், சத்திரம் பைபாஸ் ரோடு நகனம்பட்டி சாலையை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி ராணி. இவர்கள் இருவரும் டாக்டர்கள் ஒட்டன்சத்திரத்தில் தனியாக மருத்துவமனை கட்டி நடத்தி வருகிறார்கள். இவர்கள் வீட்டில் நேற்று முன்தினம் இரவு பல்வேறு மொழியில் பேசிக்கொண்ட முகமூடி அணிந்த கொள்ளையர்கள் வீட்டினுள் புகுந்து வீட்டில் இருந்த டாக்டர்கள் சக்திவேல் ராணி மற்றும் அவரது தாய் தேவநாயகம், தந்தை சென்னியப்ப கவுண்டர் ஆகியோர்களை கட்டிபோட்டு வீட்டில் இருந்த 280 பவுன் நகை ரொக்கம் 25 லட்சம் மற்றும் சொகுசு காரை கடத்திச் சென்றது ஏற்கனவே தெரிந்தது. இந்த காரை ஒட்டன்சத்திரத்தில் இருந்து கடத்தி வந்து நிலக்கோட்டை தாலுகா, அம்மையநாயக்கனூர் அருகே உள்ள ராமராஜபுரம் பிரிவு என்ற இடத்தில் ஓரமாக நிறுத்திவிட்டு கொள்ளையர்களை நகை மற்றும் பணத்துடன் தப்பி ஓடிவிட்டார்கள். இந்த காரை நேற்று மதியம்  அப்பகுதியில் பொதுமக்கள் காலையிலிருந்து வெகுநேரமாக அனாதையாக நிற்பதைப் பார்த்து அம்மையநாயக்கனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சமூக லட்சுமி தலைமையில் போலீசார் விரைந்து சென்று விசாரணை செய்தபோது இந்தக் கார் ஒட்டன்சத்திரத்தில் டாக்டர்கள் தம்பதிகளின் வீட்டில் இருந்து கடத்தி வரப்பட்டது என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இத்தகவல் உடனடியாக திண்டுக்கல் எஸ்பி சீனிவாசன் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுக்கு காட்டுத் தீ போல் பரவியது. இதை அறிந்த தென்மண்டல ஐஜி அன்பு தலைமையில் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். அப்போது இதை அறிந்து பத்திரிக்கையாளர்கள் விரைந்து சென்று செய்தி சேகரிக்க முற்பட்டபோது திண்டுக்கல் எஸ்பி சீனிவாசன் தற்போதுதான் தகவல் கிடைத்துள்ளது இதுகுறித்து உரிய விசாரணை நடப்பதால் பத்திரிக்கையாளர்கள் சற்று ஒத்துழைப்பு கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின் போது தென் மண்டல ஐஜி அன்பு அங்கிருந்த உயர்மட்ட போலீசாருக்கு ஒரு உத்தரவிட்டார். உடனடியாக சொகுசு கார் எடுத்துச்செல்லப்பட்டு ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லவும், திண்டுக்கல் எஸ். பி தலைமையில் 11 தனிப்படை போலீசார் நியமித்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க உத்தரவிட்டார். நிலக்கோட்டை அருகே அம்மையநாயக்கனூர் போலீஸ் சரகத்தில் சொகுசு கார் பிடிபட்ட சம்பவம் மதுரை தேனி திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் தான் இந்தக் கொள்ளையர்கள் பதுங்கிஇருக்க வாய்ப்பு இருக்கிறது என்று போலீசார் ஒரு கண்ணோட்டத்தில் விசாரணை கொண்டுவருகிறார்கள். மேலும் சொகுசு கார் பிடிபட்ட காரணத்தால் குற்றவாளிகளை விரைவில் பிடித்து விடுவோம் என்றும் போலீசார் பேசிக்கொண்டார்கள்.  இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!