Home செய்திகள் உசிலம்பட்டி அருகே நல்லிவீரன்பட்டியில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த வீட்டில் பட்டாசு வெடித்ததில் கட்டிடம் இடிந்து விழுந்தது.

உசிலம்பட்டி அருகே நல்லிவீரன்பட்டியில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த வீட்டில் பட்டாசு வெடித்ததில் கட்டிடம் இடிந்து விழுந்தது.

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லிவீரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காத்தம்மாள்.இவருடைய மகன்கன் பிரபு பிரவீன்.இதில் பிரவீன் சிவகாசியில் பட்டாசு தயாரிக்கும் கம்பெனியில் பணிபுரிந்து வந்ததாகவும் நண்பர்கள் யாரேனும் விசேஷத்திற்கு பட்டாசு கேட்டால் வாங்கி வந்து கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.நாளடைவில் சிவசாசியிலிருந்து கரி மருந்து வாங்கி வந்து தன்னுடைய வீட்டின் 3வது மாடியில் குடோன் அமைத்து பட்டாசு தயாரிக்கும் தொழில் செய்து வந்துள்ளார்.இந்நிலையில் செக்காணுரணியைச் சேர்ந்த அஜித் என்பவர் விசேஷத்திற்கு பட்டாசு வாங்க நல்லிவீரன்பட்டிக்கு காத்தம்மாள் வீட்டிற்கு வந்துள்ளார்.வீட்டில் ஆண்கள் யாரும் இல்லாததால் காத்தம்மாள் மாடி குடோன் சாவியை கொடுத்து பட்டாசு எடுக்கச் சொன்னதாகக் தெரிகிறது.இதில் அஜித் பட்டாசு எடுக்கச் சென்ற போதுதான் பட்டாசு வெடித்ததாகக் கூறப்படுகிறது.அஜித் சம்பவஇடத்திலேயே உடல் சிதறி பலியானார்.பட்டாசு வெடித்ததில் காத்தம்மாள் வீடு இடிந்து வீடு இடிந்து விழுந்தது.மேலும்; சுற்றிலும் 10க்கும் மேற்ப்பட்;ட வீடுகளின் கண்ணாடிகள் உடைந்து விரிசல் ஏற்ப்பட்டுள்ளன.சம்பவமறிந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலிசார் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.மேலும் காத்தம்மாள் வீட்டில் 2 மாடியில் வாடகைக்கு இருந்த வினிதா மற்றும் பூங்கா என்ற 6 மாத குழந்தை ஆகிய இருவரும் படுகாயமடைந்து சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.பட்டாசு விபத்தின் போது நல்லிவீரன்பட்டியைச் சேர்ந்த பெரும்பாலானோர் விசேஷ நிகழ்ச்சிக்காக உசிலம்பட்டி சென்றதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.சம்பவமறிந்த மதுரை காவல் கண்காணிப்பாளர் பாஸகரன் சம்பஇடத்தை நேரில் பார்வையிட்டார்.அனுமதியின்றி பட்டாசு தயாரித்த காத்தம்மாளை கைது செய்த உசிலம்பட்டி போலிசார் தலைமறைவான மகன்கள் பிரவீன் பிரபுவைத் தேடி வருகின்றனர்.இச்சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!