Home செய்திகள் சுரண்டை அருகே 800 ஆண்டு பழமையான கல்வெட்டு;வரலாற்று குழுவினர் ஆய்வு..

சுரண்டை அருகே 800 ஆண்டு பழமையான கல்வெட்டு;வரலாற்று குழுவினர் ஆய்வு..

by mohan

சுரண்டை அருகே உள்ள நொச்சிகுளத்தில் 800 ஆண்டு பழமையான உருளை வடிவிலான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி வரலாற்று குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள நொஞ்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் சின்ன வீர சின்னு என்பவர் மகன் வீர மல்லையா இவர் மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பிஏ வரலாறு முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். கல்லூரி பேராசிரியர்கள் வரலாற்று கல்வெட்டுகள் குறித்து கூறியவற்றின் அடிப்படையில் அவரது ஊரில் திருமலையாண்டி நாயக்கர் மகன் அப்பையா நாயக்கர் என்பவர் இடத்தில் உருளை வடிவ கல்லில் எழுத்துகள் பொறிக்கப்பட்டு உள்ளதாகவும், அதனை வழிபட்டு வருவதாகவும் கல்லூரி பேராசிரியர்களிடம் தெரிவித்தார்.

அதன் பேரில் கல்லூரி தலைவர் ராஜகோபால் மற்றும் செயலாளர் விஜயராகவன் அறிவுறுத்தல் படி பேராசிரியர்கள் ராஜகோபால், பிறையா மற்றும் சமூக ஆர்வலர் அஸ்வத் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மேற்கண்ட உருளை வடிவ கல்வெட்டை ஆய்வு செய்ததில் மேற்படி கல்வெட்டு சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு அவ்விடத்தில் கிடைத்ததாகவும், அதனை அப்பையா நாயக்கர் நட்டு பராமரித்து வழிபட்டு வருவதாகவும் தெரிந்து அதில் உள்ள எழுத்துக்களை பவுடர் போட்டு பார்த்ததில் சுமார் 18 வரிகள் உள்ள எழுத்துகள் தெரிவதை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது போலீஸ் தனிப்பிரிவு ஏட்டு சொரிமுத்து, அப்பையா நாயக்கர் மற்றும் ஊர் பொதுமக்கள் உடனிருந்தனர். இக்கல்வெட்டு 1268-1312 காலகட்டத்தில்(13ம் நூற்றாண்டு) 800 ஆண்டுகளுக்கு முந்திய 1294-95ம் ஆண்டு சய வருடத்தில் எழுதப்பட்டிருக்கலாம் எனவும்,இதனை அப்போது ஆட்சி செய்த மாறவர்மன் குலசேகர பாண்டிய மன்னன் காலத்தில் எழுதப்பட்டிருக்கும் என்றும்,மேலும் இது குறித்து கூடுதல் ஆய்வு செய்யப்படும் எனவும், இதே போன்று இப் பகுதியில் வேறு கல்வெட்டுகள் உள்ளனவா என தேடி வருவதாகவும் தெரிவித்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!