Home செய்திகள் துணிக்கடை நடத்தும் பெண்ணிடம் பணம் அபேஸ்- பணத்தை விரைவாக மீட்ட சைபர் கிரைம் போலீசார்.

துணிக்கடை நடத்தும் பெண்ணிடம் பணம் அபேஸ்- பணத்தை விரைவாக மீட்ட சைபர் கிரைம் போலீசார்.

by mohan

வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை பகுதியை சேர்ந்த இந்துமதி என்பவர் துணிக்கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் மொத்தமாக துணி வாங்குவதற்கு Youtube பக்கத்தில் தேடியதாகவும் அதில் இருந்த ஒரு வீடியோ-வை பார்த்து, அதை உண்மை என நம்பி முன்பணமாக ரூ.22,247/- செலுத்தி ஆர்டர் கொடுத்துள்ளார். பணத்தை செலுத்திய பின்னர் அந்த மர்ம நபரை தொடர்பு கொள்ள இயலவில்லை. இது சம்பந்தமாக கடந்த வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். இதன் பேரில் துரித நடவடிக்கை எடுத்த போலீசார், மோசடி நபரின் வங்கி கணக்கை முடக்கி, அவர் இழந்த மொத்த ரூ.22247/- பணத்தையும் மீட்டு, சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரமூர்த்தி முன்னிலையில் ஒப்படைத்தனர்.இது குறித்து வேலூர் சைபர் கிரைம் போலீசார் கூறுகையில் சமூக வலைத்தளங்களில் வரும் விளம்பரங்களின்/வீடியோக்களின் உண்மை தன்மை அறியாமல் நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என்று அறிவுரை வழங்கினா்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!