Home செய்திகள் அயர்ந்து தூங்குகின்றன தமுக்கம் கலையரங்கம் பணிகள். சிறப்பு பாா்வை

அயர்ந்து தூங்குகின்றன தமுக்கம் கலையரங்கம் பணிகள். சிறப்பு பாா்வை

by mohan

மதுரை மக்கள் பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருப்பது சித்திரை திருவிழாவும் சித்திரை பொருட்காட்சி தமுக்கம் மைதானம் கலை அரங்கம். இங்கு ஸ்மார்ட் சிட்டி பணிகள் எந்த அளவுக்கு முடிவடைந்து உள்ளது என அறிந்துகொள்ள தமுக்கம் மைதானம் உள்ளே நுழைந்தோம்.முதலில் கட்டிடத்தை சுற்றி பார்த்துக் கொள்கிறோம் என்று அங்கிருந்த ஒப்பந்ததாரர், பொறுப்பாளர்களிடம் அனுமதி பெற்று சுற்றிப் பார்த்தோம்.மைதானத்தின் வலதுபுற வாயில் வழியாக மிகப்பெரிய கலையரங்க கூடத்திற்குள் நுழைந்தோம். ஏற்கனவே இருந்த பழைய கலையரங்க கட்டிடங்கள் முழுவதுமாக தகர்க்கப்பட்டு கீழ்தளத்தில் கார், பைக் பார்க்கிங் வசதிகளுடன் அடித்தளம் அமைத்து புதிய கலையரங்கம் கட்டப்பட்டு வருகிறது. இன்னும் கட்டப்பட்டு வருகிறது.ஏசி, சாய்தளங்கள், ஜன்னல்கள், டைல்ஸ் கற்கள் உள்ளிட்ட வசதிகளுடன் கலையரங்கம் தயாராகி வருகிறது.

ஆனால் நாம் சென்ற சமயம் மொத்த மைதானத்திற்குள் 50க்கும் அதிகமான வேலையாட்கள் நிச்சயம் இருந்திருக்க மாட்டார்கள். அந்த சொற்ப வேலையாட்களும் ஹாயாக அமர்ந்திருந்தனர்.சித்திரை பொருட்காட்சி புத்தகத் திருவிழா உள்ளிட்ட மிக பிரம்மாண்டமான திறந்தவெளி நிகழ்வுகள் நடக்கும் தமுக்கம் மைதானம். காலி இடம் பாதி அடைக்கப்பட்டு கலையரங்கம் மிகவும் அகலமாக கட்டப்பட்டிருக்கிறதே என கேட்டோம். மாநகராட்சியின் பிளான்படி செய்திருக்கிறோம் என்று பதில் கூறினார்கள் கட்டுமான பொறுப்பாளர்கள்.சைலண்டாக சில படங்கள் மட்டும் எடுத்து விட்டு வெளியில் வந்தோம். அப்பொழுது மதுரைக்கார டிரைவர் ஒருவர் நம்மிடம் வந்து, ரிப்போர்ட்டரா என்றார். விபரம் சொன்னோம்.ஒரு வேலையுமே நடக்கலண்ணே. ஒப்புக்கு உட்கார்ந்து இருக்காங்க. ஆட்சி மாறினதால ஏதோ கொஞ்சம் பேரு வேலை பாக்குற மாதிரியாவது தெரியுது. அதுக்கு முன்னாடி எதுவும் நடக்காமல் எல்லாம் சும்மா கிடந்துச்சு.நம்ம தமிழ் ஆட்கள் எல்லாரும் இங்க மதுரைதான். இங்க எல்லாருக்கும் இந்த மைதானம் பழையபடி மக்கள் புழங்கும் இடமா ஆகணும்னு ஆசை. ஆனா இங்க நடக்குற வேலையோட வேகத்தை பார்த்தா அப்படி தெரியல. எனக்கு ரெண்டு மாசம் சம்பளம் பாக்கி வேற.இதையெல்லாம் சொன்னது தெரிஞ்சா அந்த சம்பளத்தையும் கொடுக்காம அனுப்பிவிடுவாங்க. இதுதான் இங்க நிலைமை. நீங்கதான் பார்த்து ஏதாவது மாற்றம் செஞ்சு தமுக்கத்தை சீக்கிரம் மக்கள் புழக்கத்திற்குவிட ஏற்பாடு செய்யணும் என்றார்.இங்க மதுரையோட தமிழோட பாரம்பரியமான கோயில் கோபுரத்தை முகப்பில் வைக்கலாம்னு திட்டம். ஆனால் ரொம்ப காலத்துக்கு முன்னாடி புதுசா வந்த உயரதிகாரி ஒருத்தரு கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். அதனால வேற எந்த மத அடையாளமும் இல்லாம பொதுவா இருக்கணும்னு சொன்னதால கோயில் கோபுரம் செட்டப் பிளான் விட்டுட்டாங்க. பிளைனாவே முகப்பை வச்சுட்டாங்க என்றார்.ஆனால் மைதானத்தின் நுழைவு பகுதியில் சிறிய அளவிலான கோவில் ஒன்று கட்டப்பட்ட வருவதை சுட்டிக்காட்டி இது மட்டும் கட்டுறாங்க என்றோம். இது அந்த சாறு வர்றதுக்கு முன்னாடியே கட்டிட்டாங்க. ஆனா இப்போ அதை கிடப்பில் போட்டு வச்சிருக்காங்க என்றார்.மக்கள் புழங்கிய மைதானத்தை மக்கள் பணமான வரிப்பணத்தில் மக்களுக்காக கட்டுகிறோம், சீரமைக்கிறோமென்று மக்கள் நுழைய தடை விதித்து இன்று மக்களின் வரி பணத்தை வீணடித்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. விரைவில் இதனை சரி செய்ய மாநகராட்சியும் மாநில அரசும் முன்வர வேண்டும் என்பது இங்கு பணியாற்றுவோரின் கோரிக்கையும் கூட.இதே மதுரையில் தற்போது தொடங்கி உள்ள கலைஞர் நூலக கட்டுமானப் பணிகூட வேகமெடுத்து அஸ்திவாரம் எழும்பி வரும் நிலையில் மூன்று ஆண்டுகள் ஆகியும் முழுமைபெறாத தமுக்கம் கலையரங்கம் இன்னும் கண்ணீர் சிந்தி ஏங்கிக் கொண்டிருக்கிறது மக்களின் காலடிபட…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!