Home செய்திகள் காவல் துறையினரை அலைக் கழித்தவருக்கு அபராதம்; தனிப்படையினருக்கு வெகுமதி..

காவல் துறையினரை அலைக் கழித்தவருக்கு அபராதம்; தனிப்படையினருக்கு வெகுமதி..

by mohan

பொய் வழக்கு மூலம் காவல் துறையினரை அலைக் கழித்தவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உயர்நீதிமன்ற உத்தரவு படி தனிப்படையினருக்கு வெகுமதிகள் வழங்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் பண மோசடி புகார் தொடர்பாக சுமார் 2 வருடங்களுக்கு முன் செங்கோட்டை காவல் நிலையத்திற்கு கோவில்பட்டியை சேர்ந்த ஜெயவேலன் என்பவரை காவல் துறையினர் விசாரணைக்காக அழைத்த பின்னர், மேற்படி ஜெயசீலன் தானாகவே தலை மறைவாகி விட்டு அவரது மனைவி சௌக்கிய தேவியின் மூலமாக ஜெய வேலன் காணாமல் போனதாக காவல் துறையினரின் மீது மதுரை உயர் நீதிமன்றத்தில் (HCP 259/2020) ஆட்கொணர்வு மனுவை சமர்ப்பித்தார். இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தனிப்படையினர் காணாமல் போனவரின் CCTV பதிவுகளையும், மற்றும் இதர வழக்கின் கோப்புகளையும் நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் சமர்ப்பித்ததில், நீதிமன்றத்தில் மேற்படி நபர் தன்னைத்தானே மறைத்துக் கொண்டுள்ளார் என்பது நிரூபிக்கப்பட்டது. மேற்படி வழக்கில் பிரதிவாதிக்காக வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் வெங்கட்ரமணன் (தென்காசி EX-MLA) இந்த வழக்கில் காவல் துறையினரின் சீரிய பணியை பாராட்டியும், பொய் வழக்கு தொடுத்தவருக்கு அபராதம் விதிக்க வேண்டும் உரிய வெகுமதி கிடைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரியதன் பேரில், இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் புகழேந்தி மற்றும் கல்யாண சுந்தரம் ஆகியோர் காவல் துறையினரின் துரித நடவடிக்கையை பாராட்டியும் பொய்யாக வழக்கு தொடுத்து காவல் துறையினரை அலைக்கழித்த ஜெயவேலன் மற்றும் அவரது மனைவி சௌக்கிய தேவி ஆகியோரை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் 1 லட்ச ரூபாய் இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த இழப்பீடு தொகையானது ஜெயவேலன் என்பவரால் காவல் துறையினரின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS வழக்கில் திறம்பட பணியாற்றிய செங்கோட்டை காவல் ஆய்வாளர் அரிஹரன் (தற்போது பேட்டை திருநெல்வேலி) ஷியாம் சுந்தர் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் சண்முகநாதன், தலைமை காவலர்கள் சீவலமுத்து, அருள், காளிதாஸ், காவலர் முத்துக்குமார் ஆகியோரை நேரில் அழைத்து அவர்களுக்கு பண வெகுமதி வழங்கி, தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். இதுபோன்ற வழக்குகளில் காவல்துறையினருக்கு சாதகமாக தீர்ப்பு வருவது மிகவும் அரிதானது. தமிழக காவல்துறை வரலாற்றில் இதுபோன்ற அரிதான செயலை நிகழ்த்திக் காட்டிய தென்காசி மாவட்ட காவல் துறையினரை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!