Home செய்திகள் காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பொது ஏலம்.

காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பொது ஏலம்.

by mohan

மதுரை மாவட்டத்தில் காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட வாகனங்களை அரசு நெறி முறைப்படி ஏலம் விடுவதற்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்வீ.பாஸ்கரன, உத்தரவிட்டார்கள். அந்த வகையில் இன்று மதுரை மாவட்ட ஆயுதப் படையில் வைத்து 51 இருசக்கர வாகனம் மற்றும் 22 நான்கு சக்கர வாகனங்கள் மொத்தம் 73 காவல் வாகனங்களை ஏலம் விடப்பட்டது.அதில், 59 வாகனங்களை ஏலதாரர்களால் ஏலம் எடுக்கப்பட்டது.முன்னதாக, ரூபாய் 5000 வைப்புத் தொகை வைத்தவர்கள் இந்த ஏலத்தில் இடம் பெற்றார்கள். 59 வாகனங்கள் ஏலதாரர்களால் ஏலம் எடுக்கப்பட்டது. மேலும் ,ஏல தொகையாக ரூபாய்- 12,73,100/- வும் ஜிஎஸ்டி வரியாக ரூபாய் 1,84,692/-வும் ஆக மொத்தம் ரூபாய் 14,57,792/- ஏலம் விடப்பட்டது.மேற்படி, வாகனங்களை ஏலம் எடுத்தவர்கள் அவற்றிற்குரிய தொகையினை செலுத்தி வாகனத்தை பெற்று செல்ல அறிவுறுத்த ப்பட்டுள்ளது.இந்த ஏலத்தில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்வீ. பாஸ்கரன், தலைமையில் நடைபெற்றது.உடன், மதுரை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்)செல்வன், மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் ஊமச்சிகுளம் உட்கோட்டம்காட்வின் ஜெகதீஷ் குமார், ஏலத்திற்கு தேவையான அனைத்து முன்னேற் பாடுகளையும்விக்னேஸ்வரன் காவல் துணை கண்காணிப்பாளர் மதுரை மாவட்ட ஆயுதப்படை செய்தார்கள்.இதில் ,வட்டார போக்குவரத்து அலுவலர். உலகநாதன், மதுரை வடக்கு மற்றும் அரசு பணிமனை உதவி பொறியாளர்,முத்துக்குமார் (ஏ.இ.) ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!