Home செய்திகள் ராமநாதபுரம் நகர்புற உள்ளாட்சி தேர்தல் மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்.

ராமநாதபுரம் நகர்புற உள்ளாட்சி தேர்தல் மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்.

by mohan

நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டவாறு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் 26.01.2022 அன்று அறிவித்துள்ளதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை, பரமக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் ஆகிய 4 நகராட்சிகள், அபிராமம், கமுதி, மண்டபம், முதுகுளத்தூர், ஆர்.எஸ்.மங்கலம், சாயல்குடி, தொண்டி ஆகிய 7 பேரூராட்சிகள் என 11 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.நேரடி தேர்தல்கள் நடைபெற உள்ள பதவியிடங்கள்கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும்,பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும்,ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும்,ராமேஸ்வரம் நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும்என 111 நகராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.அபிராமம் பேரூராட்சி உட்பட்ட 15 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும்,கமுதி பேரூராட்சி உட்பட்ட 15 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், மண்டபம் பேரூராட்சி உட்பட்ட 18 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும்,முதுகுளத்தூர் பேரூராட்சி உட்பட்ட 15 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும்,ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி உட்பட்ட 15 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும்,சாயல்குடி பேரூராட்சி உட்பட்ட 15 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும்,தொண்டி பேரூராட்சி உட்பட்ட 15 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும்என 108 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.வாக்குச்சாவடிகள்நடைபெற உள்ள தேர்தலுக்கெனகீழக்கரை நகராட்சியில் 43 வாக்குச்சாவடிகளில்,பரமக்குடி நகராட்சியில் 83 வாக்குச்சாவடிகளில்,ராமநாதபுரம் நகராட்சியில் 63 வாக்குச்சாவடிகளில்,ராமேஸ்வரம் நகராட்சியில் 42 வாக்குச்சாவடிகளில்என 231 வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.கீழக்கரை நகராட்சியில் 13 பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும் 2 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும், பரமக்குடி நகராட்சியில் 6 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும்,ராமநாதபுரம் நகராட்சியில் 5 பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும் 11 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும்,ராமேஸ்வரம் நகராட்சியில் 6 பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும்என மொத்தம் 24 பதற்றமான வாக்குச்சாவடிகளகாவும், 19 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும் நகராட்சி பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன.அபிராமம் பேரூராட்சியில் 15 வாக்குச்சாவடிகளில்,கமுதி பேரூராட்சியில் 15 வாக்குச்சாவடிகளில்,மண்டபம் பேரூராட்சியில் 18 வாக்குச்சாவடிகளில்,முதுகுளத்தூர் பேரூராட்சியில் 15 வாக்குச்சாவடிகளில்,ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் 15 வாக்குச்சாவடிகளில்,சாயல்குடி பேரூராட்சியில் 15 வாக்குச்சாவடிகளில், தொண்டி பேரூராட்சியில் 18 வாக்குச்சாவடிகளில்என 111 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.அபிராமம் பேரூராட்சியில் 4 பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும்,கமுதி பேரூராட்சியில் 3 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும்,மண்டபம் பேரூராட்சியில் 10 பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும்,முதுகுளத்தூர் பேரூராட்சியில் 3 பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும்,ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் 6 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும்,சாயல்குடி பேரூராட்சியில் 5 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும்,தொண்டி பேரூராட்சியில் 5 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும்என 17 பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும், 19 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும் பேரூராட்சி பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன. வாக்காளர்கள்நடப்பு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் உள்ள அடிப்படை விவரங்களைக் கொண்டு நகர்புறு உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல்களை தேசிய தகவலியல் மையத்துடன் இணைந்து இணைய முறையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை தயாாித்து உள்ளது.இத்தேர்தலில் கீழக்கரை நகராட்சியில் 16,243 ஆண் வாக்காளர்களும், 16,433 பெண் வாக்காளர்களும், 1 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என 32,677 வாக்காளர்களும்,பரமக்குடி நகராட்சியில் 39,039 ஆண் வாக்காளர்களும், 40,066 பெண் வாக்காளர்களும், 10 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என 79,115 வாக்காளர்களும்,ராமநாதபுரம் நகராட்சியில் 28,032 ஆண் வாக்காளர்களும், 29,657 பெண் வாக்காளர்களும், 12 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என 57,701 வாக்காளர்களும், ராமேஸ்வரம் நகராட்சியில் 18,117 ஆண் வாக்காளர்களும், 18,163 பெண் வாக்காளர்களும், 3 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என 36,283 வாக்காளர்களும்ஆக நகராட்சி பகுதிகளில் 1,01,431 ஆண் வாக்காளர்களும், 1,04,319 பெண் வாக்களார்களும், 26 மூன்றாம் பாலின வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர்.இத்தேர்தலில் அபிராமம் பேரூராட்சியில் 2,856 ஆண் வாக்காளர்களும், 3,131 பெண் வாக்காளர்களும் என 5,987 வாக்காளர்களும்,கமுதி பேரூராட்சியில் 4,846 ஆண் வாக்காளர்களும், 5,059 பெண் வாக்காளர்களும் என 9,905 வாக்காளர்களும்,மண்டபம் பேரூராட்சியில் 6,816 ஆண் வாக்காளர்களும், 6,982 பெண் வாக்காளர்களும் என 13,798 வாக்காளர்களும்,முதுகுளத்தூர் பேரூராட்சியில் 5,417 ஆண் வாக்காளர்களும், 5,473 பெண் வாக்காளர்களும் என 10,890 வாக்காளர்களும்,ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் 5,389 ஆண் வாக்காளர்களும், 5,619 பெண் வாக்காளர்களும் என 11,008 வாக்காளர்களும்,சாயல்குடி பேரூராட்சியில் 5,999 ஆண் வாக்காளர்களும், 5,914 பெண் வாக்காளர்களும் என 11,913 வாக்காளர்களும்,தொண்டி பேரூராட்சியில் 7/151 ஆண் வாக்காளர்களும், 7,212 பெண் வாக்காளர்களும் 1 மூன்றாம் பாலின வாக்காளரும் என14,364 வாக்காளர்களும்ஆக பேரூராட்சி பகுதிகளில் 38,474 ஆண் வாக்காளர்களும், 39,390 பெண் வாக்காளர்களும் மூன்றாம் பாலின வாக்காளரும் வாக்களிக்க உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில்தேர்தல் அறிவிப்பு பிரசுாித்தல் மற்றும் வேட்பு மனுக்கள் பெறுதல் – 28.01.2022 (வெள்ளிக்கிழமை)வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் – 04.02.2022 (வெள்ளிக்கிழமை)வேட்பு மனுக்களை ஆய்வு செய்தல் – 05.02.2022 (சனிக்கிழமை) வேட்பு மனுக்களை திரும்பப் பெறுதல் – 07.02.2022 (திங்கட்கிழமை)வாக்குப்பதிவு நடைபெறும் நாள் – 19.02.2022 (சனிக்கிழமை)வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் – 22.02.2022 (செவ்வாய்க்கிழமை)தேர்தல் நடவடிக்கைகள் முடிவு பெறும் நாள் – 24.02.2022 (வியாழக்கிழமை)தேர்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவி ஏற்பு நாள் – 02.3.2022 (புதன் கிழமை)மறைமுகத் தேர்தல்கள் மூலம் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்ட நாள் – 04.3.2022 (வெள்ளிக்கிழமை)சாதரண நேரடித் தேர்தல்கள் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளைக் கொண்டு பின்வரும் பதவியிடங்களுக்கு மறைமுகத் தேர்தல்கள் 04.3.2022 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறும். தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. எனவே, அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும், தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் கோவிட்-19 பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கை தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் நடைபெற எல்லா விதத்திலும் தேர்தல் நடைபெற ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், ராமநாதபுரம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!