Home செய்திகள் இடிந்து விழுந்த மாநகராட்சி ஆரம்ப சுகாதார பள்ளியின் சுற்றுச்சுவர்.

இடிந்து விழுந்த மாநகராட்சி ஆரம்ப சுகாதார பள்ளியின் சுற்றுச்சுவர்.

by mohan

மதுரை மாநகராட்சி உட்பட்ட 76 வது வார்டு பழங்காநத்தம் உழவர் சந்தை அருகே செயல்பட்டு வரும் மதுரை மாநகராட்சிக்கு கட்டுப்பாட்டிலுள்ள ஜெயகோபால் கரோடியா ஆரம்பப்பள்ளி இப்பள்ளியில் சுற்று சுவர் ஒரு பகுதி கடந்த சில நாட்களுக்கு முன் இடிந்து விழுந்து உள்ளது கொரானா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது பள்ளி மாணவ மாணவிகள் இல்லாமல் இருந்தது பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது எனினும் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளை கூட அகற்றாமல் பெயரளவிற்கு வெறும் இரண்டு பலகைகளையும் தரத்தையும் வைத்து அடைத்து வைத்துள்ளார்கள் இந்த நிலையில் வருகின்ற ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் சுற்று சுவரின் மற்ற பகுதிகள் எவ்வாறு உள்ளது எனவும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அனுப்புவதற்கு அச்சமாக உள்ளது எனவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர் நெல்லையில் நடந்த சம்பவம் போன்று இங்கும் நடந்து விடுமோ என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள் கூறுகையில்… சில நாட்களுக்கு முன் இடிந்து விழுந்த சுற்றுச்சுவரில் கட்டிட இடிபாடுகளை கூட அகற்றவில்லை வருகின்ற பிப்ரவரி ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் பெயரளவுக்கு ஒரு பலகையும் நகரத்தையும் வைத்து அடைத்து வைத்துள்ளார்கள் மற்ற பகுதியில் உள்ள சுற்று சுவர்கள் எவ்வாறு உள்ளது என உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் நெல்லையில் பள்ளியின் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து முன்று மாணவர்கள் பலியானதை நடந்த சம்பவம் போன்று நடக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதன் பின்னரே பள்ளி மாணவ மாணவிகளை ப பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டும் எனவும் அதுவரை பள்ளியை திறக்க அனுமதிக்க கூடாது என மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளார் மாநகராட்சி அதிகாரிகள் அசம்பாவித சம்பவம் நடக்கும் முன் நடவடிக்கை எடுப்பார்களா

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!