வேலூர்சத்துவாச்சாரியில் புதிய சுரங்கபாதையை திறந்துவைத்த வேலூர் எம்.பி.

வேலூர்சத்துவாச்சாரி கங்கையம்மன் கோவில்-ஆர்டிஓ சாலை இடையே ரூ1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் புதிய சுரங்கபாதை அமைக்கப்பட்டது.இதன் திறப்பு விழா குடியரசு தினத்தன்று நடந்தது.வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்யன் தலைமையில் நடந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் பாராளுமன்ற திமுக உறுப்பினர் கதிர் ஆனந்த் கலந்துகொண்டு திறந்துவைத்து சுரங்கபாதையில் நடந்து சென்றார்.விழாவில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், வள்ளலார் தொண்டுநிறுவனத் தலைவர் வள்ளலார் ஆர். பி.ரமேஷ் மற்றும் அரசுதுறை அலுவலர்கள், திமுக பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.