ராமநாதபுரத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்.

இராமநாதபுரம் ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில் நடந்த 73வதுகுடியரசு தின விழாவில்மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத் தேசியக் கொடி ஏற்றி வைத்து, காவல் துறை அணிவகுப்பு மாியாதையை ஏற்றுக்கொண்டார்.தேச ஒற்றுமையை வலியுறுத்தி சமாதான புறாக்கள், மூவர்ண பலூன்களை பறக்க விட்டார்.காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினர் 59 பேருக்கு தமிழக முதல்வர் பதக்கம், சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர் 159 பேர், சிறப்பாக பணியாற்றிய காவலர் 27 பேருக்கு நற்சான்றிதழ்கள், அரசின் பல்வேறு துறைகள் சார்பில் 130 பயனாளிகளுக்கு ரூ.46.45 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். சுதந்திர போராட்ட வீரர்கள் பாண்டியராஜ், சேது ஆகியோர் இல்லங்களுக்கு ஆட்சியர் சங்கர்லால் குமாவத், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஷேக் மன்சூர் சென்று பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், வன உயிாின காப்பாளர் ஜக்தீஷ் பகான் சுதாகர், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் உட்பட அரசு துறை அனைத்து அலுவலர்கள், உள்ளாட்சி, கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.பட விளக்கம்: ராமநாதபுரத்தில் நடந்த குடியரசு தின விழாவில் சமாதான புறாக்களை மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் பறக்க விட்டார்.பாம்பன் தோப்புக்காடு இல்லம் தேடி கல்வி மையத்தில் 73 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லியோன் தலைமையேற்று தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.கிராமத்துணை தலைவர் கருப்புசாமி, செயலாளர் செல்வ மணிகண்டன், பொருளாளர் மாரி, வார்டு உறுப்பினர் சேதுலட்சுமி முன்னிலை வகித்தனர்.தன்னார்வலர் ஜெகதீஸ்வரி,வட்டார ஒருங்கிணைப்பாளர் ததேயு ராஜ் பேசினார்.கிராமச் செயலாளர் எஸ்.செல்வ மணிகண்டன் நன்றி கூறினார். ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு நிலைய அதிகாரி தேசிய கொடி ஏற்றினார். ரயில்வே குழந்தைகள் உதவி மையம் சார்பில் ராமநாதபுரம் சிலம்பொலி சிலம்பம் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிலைய அதிகாரி ரபேல் சுரேன், ரயில்வே பாதுகாப்பு படை துணை ஆய்வாளர்கள் மோகன் ராஜ், முத்துராஜ், முதல் நிலை காவலர் ஜலாலுதீன், சுகாதார ஆய்வாளர் கரம் சங்கர், ரயில்வே குழந்தைகள் உதவி மைய இயக்குநர் தேவராஜ், துணை மைய ஒருங்கிணைப்பாளர் முஹமது அசரப் அலிகான் மற்றும் குழந்தைகள் உதவி மைய பணியாளர்கள் , ராமநாதபுரம் சிலம்பொலி சிலம்பம் பள்ளி ஆசான் லோக சுப்ரமனியன், ராமநாதபுரம் மாவட்ட. வளரி சங்க தலைவர் நாகேந்திரன் சிலம்ப ஆசிரியர்கள் தனசேகர் களஞ்சியம் ஒயிலாட்ட ஆசிரியர்கள் புஷ்பராஜ் ஜோதிபாசு ராமமூர்த்தி மற்றும் ஆகாஷ் சிலம்பொலி சிலம்பம் பள்ளி மாணவர்கள், தமிழ்நாடு ரயில்வே காவல் துறையினர் ஆகியோர் கலந்து கொண்டனர். ரயில்வே குழந்தைகள் உதவி மைய ஆற்றுப்படுத்துனர் ஹேமா நன்றி கூறினார்.மண்டபம், மண்டபம் முகாம் ஆகிய பகுதிகளில் 73 வது குடியரசு தின தேசியக்கொடியை நகர தலைவர் களஞ்சியம் தலைமையில் நகர் செயலாளர் குகன், துணை செயலாளர் செல்வம், துணைத் தலைவர் ஷாஜகான் ஆகியோர் முன்னிலையில் ராஜிவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்க சட்ட மன்ற ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜே ஸ்டாலின், வட்டார ஒருங்கிணைப்பாளர் அருள், எட்டாவது வார்டு தலைவர் சக்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
ஜி விஜய ரூபன் தேசியக்கொடி ஏற்றினார்.