நூதன முறையில் திருடப்பட்ட பணம்; தென்காசி சைபர் கிரைம் காவல்துறை உதவியுடன் மீட்பு..

அறியாமையை பயன்படுத்தி நூதன முறையில் திருடப்பட்ட பணம், ரூபாய் 3,64,999/- சைபர் கிரைம் காவல்துறை உதவியுடன் மீட்கப்பட்டது. தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகே உள்ள குறிஞ்சாங்குளம் பகுதியில் வசித்து வருபவர் சுமதி. இவரது கணவர் சுந்தரவேல் ராஜஸ்தானில் சைட் ஆபீஸராக வேலைப் பார்த்து வருகிறார். இந்நிலையில் சுந்தரவேல் கடந்த 19.11.2021 அன்று அவரது தாயாருக்கு ரூபாய் 1,69,000 பணம் SBI YONO app ல் அனுப்பியுள்ளார். அனுப்பிய பணம் தொழில்நுட்ப கோளாறால் அவரது தாயாருக்கு சென்று அடையாத காரணத்தினால் சுந்தரவேல் Online ல் SBI வங்கியின் உதவி எண்ணை தேடி (960****967) என்று தவறான எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். SBI வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து பேசுவது போல் ஏமாற்றிய மோசடி நபர் சுந்தரவேலை (Any Desk App) என்ற செயலியை பதிவிறக்கம் செய்யக்கூறி அவரது வங்கி கணக்கில் இருந்து 3,64,999 ரூபாய் பணம் திருடப்பட்டது. இதுகுறித்து சுந்தரவேலின் மனைவி சுமதி தென்காசி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் (20.11.2021) அன்று புகார் அளித்தார்.அதன் பேரில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் அறிவுரையின் படி காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள்செல்வி பணம் அனுப்பப்பட்ட வங்கிக் கணக்கை உடனடியாக ஃப்ரீஸ் செய்து விசாரணை மேற்கொண்டு மேற்படி பணம் மீட்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் முன்னிலையில், சுமதியிடம் தகுந்த ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு வழங்கி ஒப்படைக்கப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..