அவனியாபுரத்தில் ஒப்பந்தகாலம் முடிந்து மீன் பிடிப்பதை எதிர்த்து கிராம மக்கள் தண்ணீரில் இறங்கி ஆர்ப்பாட்டம்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் அய்வைத்தனேந்தல் கண்மாய் உள்ளது. அறுபத்தி மூன்று ஏக்கர் பரப்பளவு கொண்ட கம்மாயில் மீன்பிடி குத்தகைதாரராக வெள்ளக்கல் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் மீன் பிடித்து வந்தார்.இந்நிலையில் அய் வைத்தனேந்தல் கிராம மக்கள் மீன்பிடி குத்தகை காலம் முடிந்தது எனக் கூறி இன்று மீன் பிடித்த வேலையாட்கள் மற்றும் அனைவரையும் கமல் இருந்து வெளியேற்ற கோரி தண்ணீரில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதனை தொடர்ந்து அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பிரபு மற்றும் போலீசார் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும்மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜெயகுமாசம்பவ இடத்திற்கு நேரில் வந்து கிராம மக்களிடம் விளக்கம் கூறினார்.இதில் உடன்பாடு ஏற்படாததால் அவனியாபுரம்’ காவல் நிலையத்தில் தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.மீன்பிடிக்க உரிமம் ரத்து செய்தபின்னும் மீன் பிடிப்பதால் தண்ணீரில் இறங்கி ஆர்பாட்டம் செய்தால் பரபரப்பாக காணப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..