இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் மருதுபாண்டியர் என மத்திய அரசு அறிவிக்க வேண்டும் – மதுரையில் இந்தி மொழியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் சர்ச்சை

தில்லியில் உள்ள ‘இந்தியா கேட்’ பகுதியில் சுதந்திரப் போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் முழுஉருவச் சிலை நிறுவப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளாா்.இந்தநிலையில் மத்திய அரசு! ராஜா மருதுபாண்டியர் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் என்று அறிவிக்கப்பட வேண்டும் என மருதுபாண்டியர் கலா சாகித்ய பரிஷத் அமைப்பினர் மதுரையில் இந்தி மொழியில் வாசகங்கள் இடம்பெற்ற போஸ்டர்களை ஒட்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் அரசியல் கட்சியினர் நடிகர்களின் மற்றும் அறிவிப்புக் போஸ்டர்கள் தமிழ் மொழியில் அச்சிட்டு ஒட்டப்பட்டு வரும் நிலையில் தற்போது ஹிந்தியில் போஸ்டர்கள் மதுரை மாநகர் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..