கும்பாபிஷேக அழைப்புக்கு வந்த குழுவினரின் கார் பயங்கர விபத்து!

பழனியிலிருந்து கோயில் கும்பாபிஷேக அழைப்புக்காக மதுரை வந்த குழுவினர் கார் மீது மற்றொரு கார் மோதி விபத்து. நல்வாய்ப்பாக உயிர் சேதாரமின்றி சிறு காயங்களோடு அனைவரும் தப்பினர்.கோயில் ஒன்றின் கும்பாபிஷேகத்திற்கு அழைப்பு விடுப்பதற்காக பழனியிலிருந்து குழுவினர் கார் மூலம் மதுரை வந்துள்ளனர். அழகர்கோயில் சாலையில் கார் சென்று கொண்டு இருந்தது.ருந்து நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் சரவணன் என்பவர் தனது நீலநிற ஹூண்டாய் நியான் காரை ஓட்டி வந்துள்ளார். சரவணன் கார் அழகர் கோயில் சாலையில் அழகர்நகர் பகுதியில் பக்கவாட்டில் கற்பகநகர் தெருவிலிருந்து சாலையைக் கடக்க முயற்சித்தது.பாதி ரோடு கடந்து தடுப்புச் சுவருக்கு முன் சரவணன் தனது காரை நிறுத்தாமல் செலுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் பழனி குழுவினர் வந்து கொண்டிருந்த கார் மீது சரவணன் கார் மோதியது. இதில் பழனி குழுவின் வெள்ளைநிற ஹூண்டாய் வெர்னா காரின் வலது பகுதி, முன் பகுதி, முன் கண்ணாடி அப்பளம் போல நொறுங்கின.விபத்து நடந்த நேரத்தில் அந்தக் குறிப்பிட்ட பகுதியில் அதிக போக்குவரத்து இல்லாததால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு வழப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.பழனி கோயில் கும்பாபிஷேக அழைப்புக்காகமதுரை வந்த குழுவினர் கார் கே.புதூரில் விபத்துமற்றொரு கார் சாலையைக் கடக்க முயற்சித்ததில்இரண்டு கார்களும் ஒன்றுக்கொன்று மோதி விபத்துதல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்