தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்ற வேலூர் திமுக எம்.பி

வேலூர் பாராளுமன்ற உறுப்பினராக திமுக பொதுச்செயலாளர் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் காட்பாடி துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் வேலூர் பாராளுமன்ற திமுக உறுப்பினராக உள்ளார். கதிர் ஆனந்தின் பிறந்தநாளை(19-ம் தேதி) முன்னிட்டு சென்னையில் உள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.அமைச்சர் துரைமுருகனிடம் வாழ்த்து பெற்ற கதிர் ஆனந்த்தை அமைச்சர் ராணிப்பேட்டை காந்தி, அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார், வேலூர் எம்எல்ஏ கார்த்தி, மாவட்ட ஒன்றியக்குழு தலைவர் மு.பாபு, காட்பாடி ஒன்றியக்குழு துணைத்தலைவர் சரவணன், காட்பாடி ஒன்றிய அனைத்து பஞ்சாயத்துக்களின் கூட்டமைப்பு தலைவர் பிரம்மபுரம் ராதாகிருஷ்ணன், சத்துவாச்சாரி வள்ளலார்தொண்டுநிறுவனத் தலைவர் வள்ளலார் ஆர்.பி.ரமேஷ் உள்ளிட்ட திமுகவினர் வாழ்த்து கூறினர்