கீழக்கரை எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக “ஒன்றிணைவோம் சக்தி பெறுவோம்” நிகழ்ச்சி…

கீழக்கரையில்  18/1/22 அன்று மாலை புது தெருவில் எஸ்டிபிஐ கட்சியின் மேற்கு நகர் சார்பாக ஒன்றிணைவோம் சக்தி பெறுவோம் என்கிற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் sdpi கட்சியின் கொடியை புது தெரு கிளை பொருளாளர் தமீம் ஏற்றினார். தொகுதி தலைவர் பீர் முகைதீன் தலைமை தாங்கினார்

கிழக்கு நகர் தலைவர் நூருல் ஜமான் வரவேற்புரையாற்றினார். மேற்கு நகர் செயலாளர் கீழை அஸ்ரப் தொகுத்து வழங்கினார். மேற்கு நகர் தலைவர் ஹமீது பைசல் மற்றும் மாநில பேச்சாளர் மவுலானா ஜஹாங்கீர் அரூஸி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது சிறப்புரையாற்றினார். இறுதியாக மேற்கு நகர் துணை தலைவர் முஹம்மது ஜலீல் நன்றி உரையாற்றினார். இதில் தொகுதி மற்றும்கிழக்கு மேற்கு நகர் கிளை நிர்வாகிகள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வுமன்ஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சகோதர சகோதரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.