தென்காசி மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு..

தென்காசி மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் பாவூர்சத்திரம் எஸ்எஸ் கிட்ஸ் பிளே பள்ளியில் நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் ஆணையாளராக ஆல்பர்ட் நாயகம் செயல்பட்டார். சிறப்பு பார்வையாளராக மாநில பொருளாளர் ஜாண் உபால்ட் கலந்து கொண்டார். இந்த தேர்தலில் கீழ்கண்ட புதிய நிர்வாகிகள் தென்காசி மாவட்ட நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.மாவட்ட தலைவராக சு.குமார், மாவட்ட செயலாளர் வே.கிருபா சம்பத், மாவட்ட பொருளாளர் வே.நல்லையா, மாவட்ட துணைத் தலைவர்கள் திருமலைக்குமார், சி.மாரித்துரை மாவட்ட இணை செயலாளர்கள் செ.கிருபாகரன், பெ.வீரசெல்வன், மாவட்ட அமைப்பு செயலாளர் அ.சிவராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஸ்ரீதேவி, மாவட்ட மகளிர் இணை அணி கு.முருகேஸ்வரி, மாவட்ட செய்தி தொடர்பாளர் இலியாஸ், மாவட்ட சட்ட செயலாளர் பால சுப்பிரமணியன் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சு.ரத்தினகுமார்,ஜாணி, பசுபதி தனராஜ், சந்தானம், செ.கருப்பசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்தல் ஏற்பாடுகளை மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சங்கரநாராயணன், கீழப்பாவூர் வட்டார தலைவர் இராமசாமி மற்றும் வீ.கே.புதூர் வட்டார துணை தலைவர் .ஜெபா எபனேசர் ஆகியோர் செய்திருந்தனர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்