திமுக அரசு பொங்கல் பரிசு கொடுக்க முடியாததற்கு அதிமுக ஆட்சியே காரணம். அமைச்சர் பேச்சு.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பி எஸ் குமாரசாமி ராஜா திருமண மண்டபத்தில் தாலிக்கு தங்கம் திட்டம் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் M.குமார் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் இராஜபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சிங்கராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி அமைச்சர் தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் 437 நபர்களுக்கு 3 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்க உத்தரவிட்டுள்ளார் 2019 வரை பெறப்பட்ட மனுக்களுக்கு இன்று வழங்கப்படுகிறது மீதமுள்ள மனுக்களுக்கு அடுத்தடுத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.பொங்கல் பரிசு கொடுக்க வில்லை என நீங்கள் கேட்கலாம் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 4000 ரூபாய் கொடுத்தோம் பொங்கல் பரிசு வழங்குவதாக கூறினோம் கொடுக்க முடியவில்லை அரசாங்கத்தில் பணம் இல்லை இதற்கு காரணம் முந்தைய அதிமுக ஆட்சிதான் காரணம் என குற்றம் சாட்டி அதிமுக ஆட்சியில் கடன் வைத்து விட்டு சென்றதால் தான் பொங்கல் பரிசு கொடுக்க வில்லை என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேசினார். சிறப்புரையாற்றிய பின்பு பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் புதிய ரேஷன் கார்டு போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார்..

செய்தியாளர் வி காளமேகம்