செங்கம் அருகே தலைக்கவசம் அணிவது குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு.

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் அவர்களின் உத்தரவின் பேரில் புதுப்பாளையம் காவல்துறைபுதுப்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் மகேந்திரன் தலைமையில் தலைக்கவசம் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவரும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். இல்லை என்றால் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தினார்.மேலும், புதுப்பாளையம் காவல்துறையினர் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும்
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். செல்போனில் பேசிக்கொண்டு வாகனத்தை ஓட்டக் கூடாது என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்